சலூன் கடைகள் செயல்பட அனுமதி... இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மும்பை?
மும்பையில் முடிதிருத்த கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. மகாராஷ்டிரா அரசு தனது `மிஷன் பிகின் அகெய்ன் பேஸ் IV(Mission Begin Again Phase IV)` -ன் கீழ் மாநிலத்தில் மீண்டும் சில நடவடிக்கைகளை தொடர அனுமதித்துள்ளது.
மும்பையில் முடிதிருத்த கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. மகாராஷ்டிரா அரசு தனது 'மிஷன் பிகின் அகெய்ன் பேஸ் IV(Mission Begin Again Phase IV)' -ன் கீழ் மாநிலத்தில் மீண்டும் சில நடவடிக்கைகளை தொடர அனுமதித்துள்ளது.
எனினும் தங்கள் பணியின் போது சிகையலங்கார நிபுணர்கள் முக கவசம் மற்றும் கையுறைகள் போன்ற PPE கிட்களை அணிந்திருப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.
READ | இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது...
ஒருமுறை பயன்படுத்தப்படும் பொருட்களே பெருமளவில் சலூன் கடைகளில் பயன்படுத்தப்படுவதாகவும், அறிமுகம் இல்லா நபர்களுக்கு புதிதாக சேவை வழங்குவதில்லை எனவும் உள்ளூர் சிகையலங்கார நிபுணர் ஒருவர் தெரிவிக்கின்றார். தகவல்கள் படி பெரிய கடைகளிலு அதிகபட்சமாக நான்கு முதல் ஐந்து ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
ஒவ்வொரு முறை முடி திருத்தும் போது சானிடைஸர்கள் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்றும் கையுறைகள் மாற்றப்படு வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் அவற்றின் செயல்பாட்டிற்கு கடுமையான விதிகளையும் நடைமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் எனவும் மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாங்க அறிவிப்பின்படி, முடிதிருத்தும் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் முன் நியமனங்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். முடி வெட்டுதல், முடிக்கு சாயமிடுதல், த்ரெட்டிங் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. தோல் தொடர்பான சேவைகள் தற்போது அனுமதிக்கப்படாது எனவும் அரசு அறிவிப்பு தெரிவிக்கிறது.
READ | COVID-19 விஷயத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது -பிரதமர்!
சுகாதாரம் மற்றும் தூய்மை குறித்த நிலையங்கள் நிலையான இயக்க நடைமுறைகளை (SoP) கடைபிடிக்க வேண்டும் என்றும் ஊழியர்கள் கையுறைகள், கவசங்கள் மற்றும் முகமூடிகள் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அணிய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.