இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது. நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5,08,953-ஆக அதிகரித்துள்ளது.
READ | ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்; எச்சரிக்கும் உளவுதுறை...
இதில் 1,97,387 செயலில் உள்ள வழக்குகள் எனவும், 2,95,881 பேர் இதுவரை நோய்தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் 15,685 இறப்புகள் என சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,460 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், அண்டை மாநிலமான உத்தரபிரதேசம் 136 புதிய தொற்றுகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.
டெல்லியில் இருந்து தங்கள் மாநிலத்திற்குள் வரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்திய உத்திர பிரதேச மாவட்டம், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இறப்பைக் கூட பதிவு செய்யவில்லை. இதற்கிடையில், டெல்லி ஒரே நாளில் 63 புதிய COVID தொடர்பான இறப்புகளைக் பதிவு செய்துள்ளது.
நோய்தொற்றில் இருந்து குணம்பெற்றோர் மொத்த எண்ணிக்கையில் 1,039-னை எட்டிய உத்திரபிரதேச மாவட்டம் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் நோய்தொற்றில் இருந்து குணம்பெற்றதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, மாவட்டத்தில் மொத்தம் 887 தொற்றுகள் செயலில் உள்ளன. இதுவரை, கௌதம புத்த நகர் மொத்தம் 20 கோவிட் தொடர்பான இறப்புகளைக் கண்டிருக்கிறது.
READ | நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?
ஒரு வருடத்திற்குள் அல்லது சில மாதங்களுக்குள் COVID-19-க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படலாம் என உலகம் ஒப்புக்கொண்ட பின்னர், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறது என உலக சுகாதார நிறுவனம் (WHO) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மருந்து நிறுவனமான மோடரனும் கூடிய விரைவில் தடுப்பூசியினை தயாரிக்கும் என தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் இதுகுறித்து தெரிவிக்கையில்., அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி தற்போது வளர்ச்சியின் அடிப்படையில் மிகவும் மேம்பட்ட தடுப்பூசியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.