பெங்களூரு: பெங்களூருவில் உள்ள யெலஹங்கா நியூ டவுன் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள BMS கல்லூரி அருகே டிரைவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதால், ஓடும் ரேபிடோ பைக்கில் இருந்து குதித்து இளம்பெண் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட பைக் டிரைவரை யலஹங்கா துணை நகர போலீசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் திண்ட்லுவை சேர்ந்த 27 வயதான தீபக் ராவ் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் ஏப்ரல் மாதம் 21ம் தேதி, யெலஹங்கா நியூ டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட BMS கல்லூரி அருகே நடந்தது. ஏப்ரல் மாதம் 21ம் தேதி இரவு, 11 மணியளவில், தோழியின் வீட்டிற்கு செல்ல, ரேபிடோ பைக்கை இளம்பெண் முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பைக்கில் ஏறிய பிறகு, OTP பெறுவதாக கூறி மொபைல் போனை வாங்கிக் கொண்டு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார். அவர் செல்ல வேண்டிய பாதையில் செல்லாமல், தொட்டபள்ளாப்பூர் சாலையை நோக்கி பைக்கைத் திருப்பினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டப்பட்ட ரேபிடோ டிரைவர் பைக்கை வேகமாக ஓட்டியதால், அந்த இளம் பெண் தனது பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டதாக அவர் கூறினார்.


மேலும் படிக்க | செல்போனால் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. பெற்றோர்களே உஷார் 


நாகேனஹள்ளி அருகே உள்ள தனியார் கல்லூரி முன்பு பைக்கில் இருந்து சாலையில் குதித்ததாக பெண் கூறினார். இதை கவனித்த தனியார் கல்லூரியின் பாதுகாவலர்கள் உடனடியாக விரைந்து வந்து அவரை காப்பாற்ற, ரேபிடோ டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பைக்கில் இருந்து சாலையில் விழுந்த பெண்ணின் கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது.பின்னர் அந்த இளம்பெண் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்து, பைக் டிரைவர் மீது புகார் அளித்தார். குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 


ஆந்திராவைச் சேர்ந்த குற்றவாளி தீபக், திண்டுலுவில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் அவர் குடிபோதையில் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில், அந்த பெண் பைக்கில் இருந்து கீழே விழுவதைக் காணலாம். அதே நேரத்தில் பைக் டிரைவர் தூரத்தில் நிறுத்தி திரும்பி பார்த்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதையும் காணலாம்.


மேலும் படிக்க | அதிர்ச்சி தந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு... 40 பெண்களின் கணவர்களுக்கு ஒரே பெயர்!


மேலும் படிக்க | ஹர ஹர மகாதேவா முழக்கத்துடன் யாத்ரீகர்களுக்காக திறக்கப்பட்ட கேதார்நாத் கோவில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ