ஹர ஹர மகாதேவா முழக்கத்துடன் யாத்ரீகர்களுக்காக திறக்கப்பட்ட கேதார்நாத் கோவில்!

கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பனிப்பொழிவு காரணமாக பனி மூட்டத்தில் மூழ்கியுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் வானிலை சீரடைந்த பிறகு யாத்திரை மீண்டும் தொடங்கியது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2023, 07:02 PM IST
  • கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது பனிப்பொழிவு.
  • இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றான கேதர்நாத் கோயில்.
  • கேதார்நாத் கோயில் கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது.
ஹர ஹர மகாதேவா முழக்கத்துடன் யாத்ரீகர்களுக்காக திறக்கப்பட்ட கேதார்நாத் கோவில்! title=

இந்தியாவின் 12 ஜோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றான கேதர்நாத் கோயில் உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில்,  மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு குளிர் காலத்தில் கடும் பணிப்பொழிவு நிகழும். நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் அட்சயத் திருதியை அன்று திறக்கப்பட்டு, தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள  கேதார்நாத் கோயில் கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 25 காலை குளிர்கால இடைவேளைக்குப் பிறகு, ஹர ஹர மகாதேவா என்ற கோஷத்துடன் கேதார்நாத்தின் நுழைவாயில்கள் திறக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் பனி மூடிய இமயமலை சன்னதியில், கடும் குளிரிலும், பிரார்த்தனை செய்ய ஆயிரக்கணக்கானோர் கூடினர். கோவிலின் தலைமை பூசாரி ராவல் பீமா சங்கர் லிங், மத்திரங்கள் முழங்க கோவிலின் கதவுகளை திறந்து வைத்தார். முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கோயிலில் பிரார்த்தனை செய்தார்.

ஹெலிகாப்டரில் இருந்து பக்தர்கள் மலர் தூவி சிவனுக்கு வானிலிருந்து மலர்களை சமர்பித்தனர். குளிர்கால விடுமுறைக்குப் பிறகு கோயில் கதவுகள் திறக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் பிரார்த்தனை செய்தனர். கோயில் திறக்கும் விழாவைக் குறிக்கும் வகையில், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல பக்தர்கள் உரத்த மேளம் முழங்க தெருக்களில் நடனமாடி கொண்டாடினர்.

மேலும் படிக்க | Kochi Water Metro: பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ள தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ...!

கேதார்நாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பனிப்பொழிவு காரணமாக பனி மூட்டத்தில் மூழ்கியுள்ளது. ஏப்ரல் 25ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் வானிலை சீரடைந்த பிறகு யாத்திரை மீண்டும் தொடங்கியது. இருப்பினும் யாத்திரை செல்லும் பாதையில் கடும் பனிப்பொழிவு இருப்பதால், யாத்திரைக்கான முன்பதிவை உத்தரகாண்ட் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரகாண்ட் கேதார்நாத் கோவில் செல்லும் பாதையில் வரும் வாரத்தில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும்" என்று தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் பேரில் கேதார்நாத் கோயிலின் வருகை முன்பதிவை உத்தரகாண்ட் அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மருத்துவ காப்பீடு எடுக்க போறீங்களா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News