Ayodhya Deepotsav 2023: வனவாசம் முடிந்து ராமரை வீட்டிற்கு வரவேற்கும் விதமாக வட இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி நாளன்று இந்த ஆண்டு புதிய கின்னஸ் சாதனை நடத்தப்பட்டது. ராமரின் புனித நகரமான அயோத்தியாவின் ராம் கி பைடியில் 22.23 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஏற்றி புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தியா தீபத்ஸவ் (Ayodhya Deepotsav)


மீண்டும் சரித்திரம் படைத்து கின்னஸ் சாதனையை இந்த ஆண்டும் ராமரின் புனித நகரம் படைத்துள்ளது.. கடந்த ஆண்டு 15.76 லட்சம் விளக்குகளை ஏற்றி செய்யப்பட்ட தனது சொந்த கின்னஸ் சாதனையை, அயோத்தியா நகரம் இந்த ஆண்டு முறியடித்தது.


ராம் கி பைடி


நேற்று இரவு ராம் கி பைடி என்ற படித்துறையில் மக்கள் கூட்டம் தீபாவளியைக் கொண்டாட திரண்டது. பின்மாலைப் பொழுதில் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது. அதனை அடுத்து ஒளி-ஒலி நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மேலும் படிக்க | தீபாவளி ராசிபலன்: 4 ராசிகளுக்கு அமோகமான நாள், பணமழை பொழிவாள் அன்னை லட்சுமி


ஷோபா யாத்திரை


முன்னதாக, அயோத்தி தீபோத்ஸவத்தின் முக்கிய அங்கமான ஷோபா யாத்திரையை உத்தரப் பிரதேச சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராமாயணம், ராமரின் கதைகள் உட்பட பல்வேறு சமூக பிரச்சனைகளை கருப்பொருளாக கொண்ட 18 அலங்கார அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது.



ஊர்வலம்


இந்த ஊர்வலத்தில், நாட்டுப்புற கலைஞர்கள் கலந்துக் கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். 'ஆரத்திகள்' நிகழ்ச்சிகளுடன், உதயா சதுக்கத்தில் இருந்து தொடங்கி, நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக ராம் கதா பூங்காவில் ஊர்வலம் வந்து முடிந்தது.


தீபாவளி கொண்டாட்டங்கள்


உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு, ராமர், அவரது மனைவி சீதா மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பியதை சித்தரிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட தேர்  இழுக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து மலர் பொழிய தீபாவளி கொண்டாட்டங்கள் இனிதே தொடங்கின.  


உத்தரப்பிரதேச ஆளுநர் ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் ஜெய்வீர் சிங், ராகேஷ் சச்சன், தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா என பலரும், தீப ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். முதல்வர் ஆதித்யநாத் ஸ்ரீராமரின் அடையாள முடிசூட்டு விழாவையும் செய்தார்.


அயோத்தியில் தற்போது கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் தீபோத்ஸவத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் 2017ல் யோகி ஆதித்யநாத் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தொடங்கப்பட்ட தீபாவளி கொண்டாட்டங்கள் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.


மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் 4 ராசிகளுக்கு பணமழை! கஜானாவை நிரப்ப சுக்கிரனும் சனியும் தயார்!


கின்னஸ் உலக சாதனை


2017ல் 51,000 மண் விளக்குகள் ஏற்றப்பட்டது. 2019ல் 4.10 லட்சமாகவும், 2020ல் 6 லட்சத்துக்கும் அதிகமாகவும், 2021ல் 9 லட்சத்துக்கும் அதிகமாகவும் உயர்ந்து, வருடாவருடன் அயோத்தி தீபாவளி விளக்குகளின் எண்ணிக்கை புதிய சாதனையை படைத்து வருகிறது.


தீபஒளி திருநாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு (2022) சரயு நதிக் கரையில் ராம் கி பைடியின் படித்துறைகள் முழுவதும் 17 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன, ஆனால் கின்னஸ் புத்தகம் உலக சாதனை புத்தகத்தில் ஐந்து நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஒளி வீசிய மண் விளக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டது மற்றும் சாதனை 15.76 லட்சமாக பதிவானது.


கடந்த அக்டோபரில் நடைபெற்ற தீபத்சவத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு தீபாவளி விழா சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.


மேலும் படிக்க | தீபாவளி 2023: வழிபட வேண்டிய கோயில்களும்.... அதன் சிறப்புகளும்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ