தீபாவளி ராசிபலன்: 4 ராசிகளுக்கு அமோகமான நாள், பணமழை பொழிவாள் அன்னை லட்சுமி

Diwalai Rasipalan 2023 November 12: இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எப்படி உள்ளது? அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை தெரிந்துக் கொள்வோம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 12, 2023, 05:54 AM IST
  • நவம்பர் மாதம் 12 தீபாவளி ராசிபலன்
  • குடும்பத்தில் நிம்மதியா சூழல் நிலவும்
  • சனீஸ்வரரின் அருள் பெறும் கன்னி ராசி
தீபாவளி ராசிபலன்: 4 ராசிகளுக்கு அமோகமான நாள், பணமழை பொழிவாள் அன்னை லட்சுமி title=

தினசரி ராசிபலன் 2023 நவம்பர் 11: கிரக நிலைகளுக்கும், அவற்றின் பெயர்ச்சிகளுக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரக மாற்றங்கள் மற்றும் பிற ஜோதிட அம்சங்களின் அடிப்படையில் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கை அமைகிறது. இன்றைய தினம் அனைத்து ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசிபலனை தெரிந்துக் கொள்வோம்.

மேஷம் (Aries)
சில விஷயங்களைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். நினைத்த சில பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உணர்வுப்பூர்வமாகப் பேசுவதைவிடச் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும்.  

ரிஷபம் (Taurus)

குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மேலும் படிக்க | அன்னை மகாலட்சுமியின் பிறந்தநாள்: தந்தேராஸ் நாளில் செய்ய வேண்டிய குபேர பூஜை

மிதுனம் (Gemini)
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.

கடகம் (cancer)
கடக ராசிக்காரர்களுக்கு வியாபார முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும்

மேலும் படிக்க | சனி, சுக்கிரன் மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

சிம்மம் (Leo)

வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். நம்பிக்கையானவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடிவரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும்

கன்னி (Virgo)

வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்தப் பிரச்சனைகள் குறையும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். கற்பனை கலந்த உணர்வுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கல்வி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.

துலாம் (Libra)
சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சக மாணவர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழகும் விதங்களில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தைரியம் வேண்டிய நாள். 

விருச்சிகம் (Scorpio)

எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். பணியில் மந்தமான சூழல் அமையும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். வெளியூர் பணி வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். வழக்கு தொடர்பான செயல்களில் இழுபறியான சூழல் ஏற்படும்

மேலும் படிக்க | நவம்பரில் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்

தனுசு (Sagittarius)
தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர் பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.
 
மகரம் (Capricorn)
மகர ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும்.

கும்பம் (Aquarius)

தந்தைவழி சொத்துக்களில் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இனம்புரியாத சில தேடல்கள் பிறக்கும். வாசனைத் திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும்

மீனம் (Pisces)

கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரப் பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும்

மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் 4 ராசிகளுக்கு பணமழை! கஜானாவை நிரப்ப சுக்கிரனும் சனியும் தயார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News