மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் அருகேயுள்ள ஜவ்ரா பகுதியை சேர்ந்த இளம்பெண் பிரசவத்திற்காக ரத்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 தலை, 3 கைகளுடன் கூடிய குழந்தை பிறந்தது. ஆபத்தான நிலையில் இருந்த அந்த குழந்தை, குழந்தைகள் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இந்தூரில் உள்ள எம்.ஒய். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சோனோகிராஃபி சோதனையின்போது குழந்தை இரட்டைக்குழந்தையைப் போல் தோற்றமளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | போபால் விஷ வாயு கசிவு நடந்து 36 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்கிறது நீதிக்கான போராட்டம்



குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக எம்.ஒய். மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அக்குழந்தைக்கு Dicephalic Parapagus எனும் பாதிப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Dicephalic Parapagus என்பது இரட்டைக்குழந்தைகள் கருப்பையில் முழுமையாக உருவாகாத நிலை ஆகும். இந்த பாதிப்பு உள்ள பெரும்பாலான குழந்தைகள் தாயில் கருப்பையில் அல்லது பிறந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்து விடும் எனவும், அறுவை சிகிச்சை செய்தாலும் குழந்தைகள் உயிர் பிழைக்க 30 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஒரு லட்சம் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 11 சதவீதம் குழந்தைகளுக்கு Dicephalic Parapagus பாதிப்பு உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | விநோதம்: இருவேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்..! Viral


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR