விநோதம்: இருவேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்..! Viral

அமெரிக்காவில் புத்தாண்டின்போது பிறந்த இரட்டையர்கள், நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர்

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 4, 2022, 03:35 PM IST
  • புத்தாண்டில் பிறந்த இரட்டையர்களின் வாழ்வில் விநோதம்
  • இருவேறு ஆண்டுகளின் பிறந்த இரட்டையர்கள்
  • 15 நிமிட இடைவெளியில் ஏற்பட்ட சுவாரஸ்யம்
விநோதம்: இருவேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டையர்கள்..! Viral title=

இரட்டை குழந்தைகள் பிறப்பதை பலரும் வியப்பாக பார்க்கும் நிலையில், அமெரிக்காவில் பிறந்த இரட்டையர்கள், பல சுவாரஸ்யத்துக்கும், விநோதத்துக்கும் சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர். அவர்களின் பிறப்பில் அப்படி என்ன விநோதம் இருக்கிறது? என கேட்கிறீர்களா?. 15 நிமிட இடைவெளியில் பிறந்த இருவருக்கும் பிறந்த மாதம், தேதி நேரம் ஆண்டு அனைத்தும் இருவேறு ஆண்டுகள். இந்த விநோத சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிஃபோர்னியாவின் நாட்டிவிடாட் மருத்துவமனையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு பாத்திமா என்ற பெண், பிரசவத்துக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவு 1.45 மணிக்கும் மேல் அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர். ஆனால், இருவரும் 15 நிமிட இடைவெளியில் பிறந்தால், ஒரு வருக்கு கடந்த ஆண்டு பிறந்த தேதியும், மற்றொருவருவருக்கு இந்த ஆண்டு பிறந்த தேதி, நேரம் மற்றும் ஆண்டாக அமைந்துள்ளது. 

ALSO READ | நடு நடுங்க வைக்கும் சம்பவம்; நாகப்பாம்பை கையில் பிடித்த சிறுமியின் வீடியோ

மருத்துவமனை நிர்வாகமும், விநோதமான நிகழ்வு தங்கள் மருத்துவமனையில் நடைபெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் தங்களின் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். குழந்தைகள் இருவருக்கும் அய்லின் மற்றும் ஆல்ஃபிரேடா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், ஆல்பிரேடா கடந்த ஆண்டு பிறந்தவர். அய்லின் இந்த ஆண்டு பிறந்தவர். 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் பேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், " எங்களால் இதனை நம்ப முடியவில்லை. இருவரும் இரட்டையர்கள். ஆனால், இருவருக்கும் பிறந்த தேதி, நாள் நேரம், ஆண்டு என அனைத்தும் இருவேறு ஆண்டுகளில் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் இப்படியொரு விநோதமான மற்றும் மகிழ்ச்சியான நிகழ்வு உளப்பூர்வமாக எதிர்கொண்டதில்லை. எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையின் இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் விய்ப்பை வெளிப்படுத்தியிருப்பதுடன், இரட்டையர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | ALSO READ | தாயை பார்த்து "ஹாட்" என கூறிய சிறுவன் ! வைரல் வீடியோ! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News