Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகின்றன. தேர்தலுக்கான வியூகம் அமைப்பதிலும், கூட்டணி அமைப்பதில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. மோடி தலைமையிலான பாஜக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணையக் கூடாது என, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, இந்தியா கூட்டணியில் இணையப் போவதில்லை என்றும், லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்த வரை பாஜக வலுவாக இருப்பதால், ஆர்களுக்கு எதிராக சரியான கூட்டணி அமைத்து போட்டியிட்டால், அதிக இடங்களை கைப்பற்றலாம் என காங்கிரஸ் நினைக்கிறது. அதன் காரணமாக இந்தியா கூட்டணியில் இணையுமாறு பகுஜன் சமாஜ் கட்சிக்கு பலமுறை காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. ஆனால் அதை எல்லாம் மாயாவதி நிராகரித்து வந்தார். 


மேலும் படிக்க - தமிழ்நாட்டில் INDIA vs NDA... யாருக்கு அதிக ஆதரவு - வெளியான புதிய சர்வே!


தற்போது ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்தில் பயணித்து வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, இந்தியா கூட்டணியில் இணைய மீண்டும் மாயாவதிக்கு அழைப்பு விடுத்தார். அவர் எப்போது வேண்டுமானாலும் இந்தியா கூட்டணியில் இணையலாம். அவருக்காக கதவுகள் திறந்தே உள்ளன என்றார்.


இதனையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, இந்தியா கூட்டணி இணைவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 


தனது சமூக வலைதளத்தில், "பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதன் மக்களின் நலன்தான் முக்கியம் என்றும் எனவே, ஒட்டுமொத்த சமுதாயத்தின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக ஏழைகள், சுரண்டப்பட்டவர்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்டவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மன பலத்துடன் தனது சொந்த பலத்தில் மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி முடிவெடுத்து இருப்பதாக்வும், எனவே வதந்திகள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 



மேலும் படிக்க - தொகுதிப் பங்கீடு இறுதி செய்தால் மட்டுமே நீதி பயணத்தில் பங்கேற்போம் -அகிலேஷ் யாதவ்


கடந்த மாதம் கூட்டணி குறித்து பேசியிருந்த மாயாவதி, "வரும் லோக்சபா தேர்தலில் தன் கட்சி தனித்து போட்டியிடும் எனக் கூறியிருந்தார். எனினும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அவர் நிராகரிக்கவில்லை. நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும், தனது கடைசி மூச்சு வரை கட்சியை வலுப்படுத்த முயற்சிப்பேன் என்று மாயாவதி கூறியிருந்தார். 


மேலும் ஜாதி, முதலாளித்துவ மற்றும் வகுப்புவாதக் கருத்துகளைக் கொண்ட அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் பகுஜன் சமாஜ் கட்சி தூரத்தைக் கடைப்பிடிக்கும் என்று மாயாவதி கூறியிருந்தார். 


அதேபோல சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மாயாவதி தனது கட்சியினரிடம் கேட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க - வரலாறு காணாத சரிவை கண்ட பகுஜன் சமாஜ் கட்சி! தோல்வியடைந்ததா மாயாவதியின் உக்தி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ