கடந்த சில நாட்களாக ஸ்பைஸ் ஜெட்  விமானம் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சுமார் 7 முறை தரையிக்கப்பட்ட செய்தி பெரும் ப்ரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டிஜிசிஏ விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.  இந்நிலையில், தற்போது விஸ்தாரா விமானத்தின் என்ஜின் பழுதானதால், அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாங்காக்கில் இருந்து தில்லி வந்த விஸ்தாரா விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, தரையிறங்கிய விமானம், பார்க்கிங் இடத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. எனினும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட விஸ்தாரா நிறுவனம், ‘2022, ஜூலை 5ம்தேதி, விஸ்தாரா நிறுவனத்தின் பாங்காக்கில் இருந்து தில்லி வந்த UK122 விமானம் தரையிறங்கிய பின், பார்க்கிங் இடத்திற்கு செல்லும் சிறிய மின் கோளாறு ஏற்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விமானத்தை இயக்காமல், இழுத்து செல்ல முடிவெடுக்கப்பட்டது’ என கூறியுள்ளது.


மேலும் படிக்க | சிக்கலில் SpiceJet நிறுவனம், 17 நாட்களில் நடந்த 7 அதிர்ச்சி சம்பவங்கள்



முன்னதாக, இன்று  ஸ்பைஸ் ஜெட் விமானங்களில், கடந்த 17 நாட்களில் 7 முறை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக,  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள், நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.  


கடந்த சில நாட்களாக ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப கோளாறுகள் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது விஸ்தாரா விமானம் தொடர்பான சம்பவம் மக்கள் மனதில் விமான போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான கவலைகளை எழுப்பியுள்ளது. 


மேலும் படிக்க | கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய ட்விட்டர்: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு


மேலும் படிக்க | பெட்ரோல்-டீசல் GST வரம்புக்குள் வருவது எப்போது; வருவாய்த்துறை செயலர் கூறுவது என்ன


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR