விரைவில் ஆதார் அடிப்படையில் பெங்களூரு விமான நிலையம்
நாட்டின் முதல் முழு ஆதார் அடிப்படையாக கொண்டு இயங்கும் விமான நிலையமாக பெங்களூரு சர்வதேச விமானநிலையம் மாற உள்ளது.
2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பெங்களூரு, கேம்பிகவுடா சர்வதேச விமானநிலையத்திற்குள் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
விமான பயணிகளின் தனிப்பட்ட அடையாளங்களை உறுதி செய்து கொள்வதற்காக ஆதாரை அடைப்படையாக கொண்ட முறையை அறிமுகப்படுத்த நினைத்திருப்பதாக பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.