Covaxin செயல்திறன் அபாரம்! பாரத் பயோடெக்கின் ஆய்வு முடிவு!
கொரோனா நோயாளிகளுக்கு 77.8% பலனளிப்பதாக தெரியவந்துள்ளது.கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது...
கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகளுக்கு (COVID19 patients) 77.8% பலனளிப்பதாக தெரியவந்துள்ளது.
தீவிரமான தொற்று பாதித்தவர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி 93.4% பலனளிப்பதாக பரிசோதனைகள் தெரிவிக்கின்றன. கோவிட் நோய் பாதித்த 130 பேருக்கு தடுப்பூசி போட்ட பிறகு செய்த ஆய்வின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் முடிவை பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய செயல்திறன் சோதனையில் இந்த தடுப்பூசி 'பாதுகாப்பானது' என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 98 வயது வரையிலான 25,798 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் நவம்பர் 16 முதல் 2021 ஜனவரி 7 வரை ஆய்வு செய்யப்பட்டனர்.
இறுதி பகுப்பாய்வு ஒரு ஸ்பான்சர் வழங்கிய சீரற்றமயமாக்கல் திட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது., 24,419 பேருக்கு இரண்டு முதல் நான்கு வார இடைவெளியில் கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
இரண்டாவது டோஸுக்குப் பிறகு குறைந்தது இரண்டு வாரங்களுக்குப் பிறகு 16,973 (0.77%) பங்கேற்பாளர்களில் 130 அறிகுறி கோவிட் -19 நோய் பதிவாகியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவாக்சினுக்கு அங்கீகரம் கோரி உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் மத்திய அரசு விண்னப்பித்துள்ள நிலையில் இந்த முடிவு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | Fake Vaccination: மும்பை போலி தடுப்பூசி முகாம்; வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR