HD Revanna Arrested: கர்நாடக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஹெச்.டி. ரேவண்ணா இன்று கைது செய்யப்ட்டுள்ளார். இவரின் மகன் பிரஜ்வெல் ரேவண்ணாவால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் கடத்தல் வழக்கில் ரேவண்ணா சிறப்பு புலனாய்வு குழுவால் ஹசன் நகரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகன் ஹெச்.டி. ரேவண்ணா. கர்நாடகாவின் ஹோலேநரசிபூர் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவான இவர் அக்கட்சியின் தலைவரான ஹெச்.டி. குமாரசாமியின் மூத்த சகோதரர் ஆவார். மேலும், தேவகௌடாவின் பேரனும், ஹெச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வெல் ரேவண்ணா. இவர் ஹசன் மக்களவை தொகுதியில் தற்போது வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். 


பிரஜ்வெல் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கு


பிரஜ்வெல் ரேவண்ணா மீது கடந்த சில நாள்களாக தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. இவர் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவர்களை ஆபாச படம் எடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமின்றி அந்த ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளன. 


மேலும் படிக்க | அமேதி: 40 வருட களப்பணி, 63 வயது இளைஞர், அயராத காங்கிரஸ் அபிமானி.... யார் இந்த கிஷோரி லால் சர்மா?


பிரஜ்வெல் ரேவண்ணாவை கைது செய்ய கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளது. பிரஜ்வெல் ரேவண்ணா மீது பல பேர் புகார் அளித்திருந்தாலும், இந்த ஹெச்.டி. ரேவண்ணாவின் வீட்டில் 6 வருடங்களாக பணியாளராக இருந்த பெண்ணின் மகன் அளித்த புகார் முக்கியமாக பார்க்கப்பட்டது. 


காவலில் எடுத்து விசாரணை


பிரஜ்வெல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் தொடர்ந்து வெளியான நிலையில், அதில் ஒரு வீடியோவில் அவரின் தாயார் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது பதிவாகியிருந்தது. அந்த வீடியோ வெளியானதில் இருந்து தனது தாயாரை காணவில்லை என அவர் புகாரில் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, ஹெச்.டி ரேவண்ணா மற்றும் உதவியாளர் பாபண்ணா ஆகியோர் மீது கடந்த வியாழக்கிழமை அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 



இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கேஆர் நகர் காவல்நிலையத்தில் பதியப்பட்ட அந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஹெச்.டி. ரேவண்ணாவும், இரண்டாம் குற்றவாளியாக பாபண்ணா சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் தேவகௌடாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு ஹெச்.டி. ரேவண்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரை கைது செய்த சிறப்பு விசாரணை குழு ஒரு நாள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவெடுத்துள்ளது. 


முன்னதாக, ஹெச்.டி. ரேவண்ணாவிற்கு முன்ஜாமீன் கொடுக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்தது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் இருந்து 2 மணி நேரத்திற்கு பின் இந்த கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.


மேலும் படிக்க | துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு... பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ