Chandigarh Dibrugarh Express Train Accident: உத்தர பிரதேசத்தில் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து மதியம் 2.40 மணிக்கு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2 பேர் பலி


முதலில் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக உறுதியாகி உள்ளது. உத்தர பிரதேசத்தின் கோண்டா மற்றும் ஜிலாஹி நகரங்களுக்கு இடையே உள்ள பிகௌரா எனும் பகுதியில் இந்த ரயில் விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளது. மருத்துவ குழுவும் விரைந்து சென்று அங்கு காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!


ரயில் பயணிகள் பலரும் இதில் காயமடைந்திருக்கும் நிலையில், சிலர் தங்களது உடைமைகளுடன் தண்டவாளத்தின் அருகே நின்றுகொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. 15904 என்ற ரயில் எண் கொண்ட இந்த ரயில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் நகரில் இருந்து சண்டிகரை நோக்கி இந்த ரயில் சென்றுகொண்டிருந்தது. 



12 பெட்டிகள் தடம் புரண்டன


தடம்புரண்ட 12 ரயில் பெட்டிகளில், நான்கு ஏசி பெட்டிகளும் அடக்கம். அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா மற்றும் உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் சம்பவம் இடத்தில் நிலைமையை சீர் செய்யவும், மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ரயில் விபத்து குறித்து உத்தர பிரதேச முதலமைச்சர் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "கோண்டா மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்து, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுமாறு முதலமைச்சரால் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளது.


அவரச உதவி எண்கள் அறிவிப்பு:


அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு எண்: 9957555984, லக்னோ : 8957409292, கோண்டா : 8957400965, ஃபர்கேட்டிங் (FKG) நகரின் அவசர உதவி எண்: 9957555966, மரியானி (MXN) உதவி எண் : 6001882410, சிமல்குரி (SLGR) உதவி எண் : 8789543798, டின்சுகியா (NTSK) உதவி எண் : 9957555959, திப்ருகர் (DBRG) உதவி எண் : 9957555960 ஆகியவற்றை தொடர்புகொண்டு உதவிகளை கோரலாம்.  


மேலும் படிக்க | மழைவெள்ளத்தின் கோர தாண்டவம், ஒரு நொடியில் வீட்டை துவம்சம் செய்த அலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ