திருமணத்திற்கு புறப்பட்ட மணமகன்... சிறுநீர் கழிக்கச் சென்றபோது மரணம் - பாம்பு கடித்து கொடூரம்!

Groom Died By Snake Bite: திருமணத்திற்கு புறப்பட்டபோது அவசரமாக பக்கத்தில் இருந்த புதரில் சிறுநீர் கழிக்க சென்றபோது, பாம்பு கடித்து மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 14, 2024, 10:39 AM IST
  • உடனடியாக உள்ளூர் மருத்துவரிடம் கொண்டுச் செல்லப்பட்டும் உயிரிழந்தார்.
  • கடந்த 2 மாதங்களில் அப்பகுதியில் இது 7ஆவது பாம்பு கடி சம்பவமாகும்.
  • மழைக்காலம் என்பதால் மக்கள் கவனத்தோடு இருக்க மருத்துவர்கள் அறிவுரை
திருமணத்திற்கு புறப்பட்ட மணமகன்... சிறுநீர் கழிக்கச் சென்றபோது மரணம் - பாம்பு கடித்து கொடூரம்! title=

Uttar Pradesh Groom Died By Snake Bite: உத்தர பிரதேசம் மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் திபாய் நகரின் அருகே உள்ள அகர்பாஸ் கிராமத்தில் 26 வயதான மணமகன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

26 வயதான அந்த இளைஞரின் பெயர் பிரவேஷ் குமார். இவர் ஃபரிதாபாத் நகரில் பலசரக்கு கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமணம் நடைபெற இருந்த சூழலில் இந்த அசாம்பாவிதம் நடந்திருக்கிறது என கூறப்டுகிறது. 

சிறுநீர் கழிக்க சென்றபோது விபரீதம்

இந்த சம்பவம் குறித்து பிரவேஷின் சகோதரி கூறுகையில்,"திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 11) இரவு தயாராக இருந்தது. அப்போது பிரவேஷ் ஒரு புதருக்கு அருகே சிறுநீர் கழிக்க சென்றிருக்கிறார். அவர் நீண்ட நேரம் திரும்ப வராததை கண்டு குடும்ப உறவினர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது சுயநினைவின்றி பிரவேஷ் அங்கு விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 12)  காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என்றார்.

மேலும் படிக்க | 7 மாநில இடைத்தேர்தல் வெற்றி.. மோடி சர்வாதிகாரத்திற்கு கிடைத்த சம்மட்டி அடி - ராகுல்

மருத்துவரின் அறிவுரை

திபாய் பகுதியின் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூத்த மருத்துவர் கூறுகையில், பாம்பு கடித்துவிட்டால் மக்கள் பதற்றமடையாமல், பயப்படாமல் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும்,"விஷ முறிவு தடுப்பூசி மற்றும் பிற மருத்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. இது மழை காலம் என்பதால் மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்... குறிப்பாக கிராமத்தில் வசிப்போர்..." என்றார். 

புலந்த்ஷஹர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தம் 7 பேர் பாம்பு கடித்து உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் கூட புலந்த்ஷஹர் மாவட்டத்தின் சதாரி பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வயதான பெண்மணியும் அவரது பேரனும் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. 

சனிக்கிழமை தோறும் பாம்பு கடி!

மறுபுறம், இதே உத்தர பிரதேசத்தின் ஃபதேபூர் நகரில் 24 வயதான விகாஸ் தூபே என்பவரை கடந்த ஒரு 45 நாள்களில் 7 முறை பாம்பு கடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாம்பு கடித்தத்தில் இருந்து ஏழு முறையும் அவர் உயிர்பிழைத்திருக்கிறார். மேலும், தனக்கு பொருளாதார ரீதியாக உதவி வேண்டும் என விகாஸ் அதிகாரிகளை நாடியதாக அப்பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரி ராஜிவ் நயன் கிரி தெரிவித்திருக்கிறார். 

அதாவது, ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விகாஸ், அதிகாரிகளின் முன்னிலையில், தொடர்ந்து பாம்பு கடித்தத்தில் தான் பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தனக்கு உதவிடும்படியும் கோரிக்கை விடுத்தார். மேலும், அவரிடம் அரசு மருத்துவமனைக்கு சென்றால் இலவசமாகவே பாம்பு கடிக்கு விஷ முறிவு மருந்துகளை கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டதாக கிரி கூறினார். 

மேலும் கிரி இதுகுறித்து கூறுகையில்,"அவரை பாம்புதான் கடிக்கிறதா என்பதை முதலில் நாங்கள் உறுதிசெய்ய வேண்டும். அவருக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவரையும் நாங்கள் ஆலோசனை நடத்த வேண்டும். அந்த நபரை ஒவ்வொரு சனிக்கிழமையும் பாம்பு கடிப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், ஒரு நாளிலேயே குணமாகிவிடுகிறார். இது வினோதமாக இருக்கிறது. மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள குழு ஒன்றை அமைக்க உள்ளதாகவும், அதன்பின் இதுகுறித்த பின்னணி பொதுவெளியில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க | உத்தரப்பிரதேசம் : 'கணவருக்கு ஆண்மையில்லை' மாமனார் கொடுத்த தொல்லை - இளம்பெண் பரபரப்பு புகார்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News