Free Bus Service: நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பேருந்தில் பயணிக்கின்றனர். மக்கள் குறுகிய தூரம் மற்றும் மாநிலங்களுக்கு உள்ளே நீண்ட தூரம் பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள். அதே சமயம் மக்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது ரயிலை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தற்போது பேருந்தில் பயணிக்கும் மக்களுக்கு பாஜக ஆளும் மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது. 


ரக்ஷாபந்தன் பண்டிகை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கொண்டாடப்படும். இதை மனதில் வைத்து, சகோதர சகோதரிகளுக்கு இடையே கொண்டாடப்படும் பண்டிகையான ரக்ஷாபந்தனை முன்னிட்டு உத்தரபிரதேச அரசு மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவையை அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் மாநிலத்தில் உள்ள பெண்கள் ரக்ஷாபந்தன் நாளில் இலவச பேருந்து சேவையை அனுபவிக்க முடியும். இதன்படி, உத்தரப் பிரதேசத்தின் 14 மாவட்டங்களில் உள்ள பெண்கள் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.


இலவச பேருந்து சேவை


உத்தர பிரதேசத்தின் இணைச் செயலாளர் கல்யாண் பானர்ஜி மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ், லக்னோ, கான்பூர், மீரட், பிரயாக்ராஜ், வாரணாசி, காசியாபாத், கோரக்பூர், ஷாஜஹான்பூர், ஆக்ரா மற்றும் மதுரா, அலிகார், மொராதாபாத், ஜான்சி, பரேலி ஆகிய இடங்களில் சிறப்பு நோக்க வாகனம் (SPV) மூலம் இலவச பேருந்து பயண வசதி வழங்கப்படும்.


மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே.. புதிய ரூல்ஸ்: இரவு நேர பயண விதிகளில் மாற்றம், இனி இதையெல்லாம் செய்ய முடியாது!!


ரக்ஷாபந்தனில் உத்தரபிரதேச அரசு இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறை அல்ல. இவ்விழாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதியை கடந்த சில ஆண்டுகளாக அரசு செய்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது என்பதால் இந்த அறிவிப்பை இப்போது வெளியிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ரக்ஷாபந்தன் நாளில், அரசின் இலவச பேருந்து சேவையால் பெண்களுக்கும் ஏராளமான நிவாரணம் கிடைக்கிறது.


தமிழ்நாட்டில் ஆண்டுதோறும்...


தமிழ்நாட்டை பொறுத்தவரை பண்டிகை தினங்கள் மட்டுமின்றி ஆண்டுதோறும் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் நீண்ட தூரம் என்றாலும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்வதை ஊக்கவிக்கவும், பெண்கள் பணிக்கு செல்வதை ஊக்கவித்து வருமானத்தை மிச்சப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தினார். 


கடந்த 2021ஆம் ஆண்டில் 10 ஆண்டுகள் கழித்து திமுக அரசு தமிழ்நாட்டின் ஆட்சிக்கட்டிலில் ஏறிய உடன் பேருந்தில் மகளிருக்கான இலவச பேருந்து சேவை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால், நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் பலனடைந்து வருகிறார்கள். 


பலனடையும் பெண்கள்


அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டமும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. திருமணத்திற்கு நிதியுதவி அளிப்பதை விட கல்விக்கு ஊக்கத்தொகை அளிப்பது சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. மகளிருக்கான மற்றொரு பலனாக, வரும் செப். 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத்தொகையாக வழங்கப்பட உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | இந்தியன் ரயில்வேயின் புதிய வழிகாட்டுதல்கள்: மூத்த குடிமக்களுக்கு பம்பர் செய்தி!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ