இந்திய ரயில்வே: அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். சில விஷயங்களை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பிரச்சனைகளுக்கு ஆளாகலாம். ரயில் பயணத்தின் போது நீங்கள் செய்யும் சிறிய தவறும் கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது பொதுவாக ரயிலில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். இரவில் இரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கான விதிகளை ரயில்வே சமீபத்தில் மாற்றியுள்ளது.
ரயில்வேயின் புதிய விதிகளின்படி, தங்கள் இருக்கை, பெட்டி அல்லது கோச்சில் எந்தப் பயணியும் மொபைலில் உரத்த குரலில் பேசவோ, உரத்த ஒலியுடன் பாடல்களைக் கேட்கவோ முடியாது. பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கவும், பயணத்தின் போது நிம்மதியாக உறங்கவும் ரயில்வே இந்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பல பயணிகள் தங்கள் கோச்சில் தங்களுடன் பயணிப்பவர்கள் தொலைபேசியில் சத்தமாகப் பேசுகிறார்கள் என்றும் இரவு வெகுநேரம் வரை பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அடிக்கடி ரயில்வேயிடம் புகார் கூறுவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ரயில்வேயின் எஸ்கார்ட் ஊழியர்கள் அல்லது பராமரிப்பு ஊழியர்களும் சத்தமாக பேசுவதாக சில பயணிகளிடம் இருந்து புகார் எழுந்துள்ளது. இதுதவிர பல பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் மின்விளக்குகளை எரிய வைப்பதால் சக பயணிகளின் தூக்கம் கலைகிறது. இதைக் கருத்தில் கொண்டு ரயில்வே புதிய விதியை வகுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பயணிகள் விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் படிக்க | வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... செப்டம்பரில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!
புதிய விதிகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்
ரயிலில் பயணம் செய்யும் போது இரவு 10 மணிக்கு மேல் மொபைலில் சத்தமாக பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. புதிய விதிகளின்படி, இரவுப் பயணத்தின் போது பயணிகள் சத்தமாகப் பேசவோ, இசையைக் கேட்கவோ முடியாது. பயணிகள் யாராவது புகார் அளித்தால், அதைத் தீர்க்கும் பொறுப்பு ரயிலில் இருக்கும் ஊழியர்களின் பொறுப்பாகும்.
தூங்கும் நேரத்தில் மாற்றம்
ரயில்களில் தூங்கும் நேரத்தை ரயில்வே மாற்றியுள்ளது. முன்னர், பழைய விதிகளின் படி, பயணிகள் இரவு பயணத்தின் போது அதிகபட்சமாக ஒன்பது மணி நேரம் தூங்கலாம். ஆனால் தற்போது இந்த அவகாசம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் தூங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரயில்வே மூலம் மாற்றப்பட்ட விதிகளின்படி இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும். அதாவது, இப்போது தூங்கும் நேரம் 8 மணிநேரமாக குறைந்துள்ளது. இந்த மாற்றம் தூங்கும் வசதி கொண்ட அனைத்து ரயில்களிலும் பொருந்தும்.
இந்தியன் ரயில்வே
இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ