Crime News: உத்தரகண்ட் மாநிலத்தின் ஹல்த்வானியில் உள்ள உள்ளூர் ஹோட்டலில் நடந்த தொழிலதிபர் அங்கித் சவுஹானின் கொடூரமான கொலை வழக்கில் முதன்மை சந்தேக நபரை போலீசார் தற்போது பிடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஹி (எ) டோலி என்று அழைக்கப்படும் குற்றஞ்சாட்டப்பட்டவர், அங்கித்தை ஒரு கொடிய பாம்பு வைத்து கடிக்க செய்து அவரது மற்றொரு காதலரான தீபு காண்ட்பால் உடன் கொலை செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குற்றத்தில் ஈடுபட்டுள்ள வீட்டுப் பணிப்பெண் மற்றும் ஒரு ஆண் வேலைக்காரனை அதிகாரிகள் இன்னும் தேடி வருகின்றனர். கொலையில் தொடர்புடைய பாம்புகளின் உரிமையாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.


விசாரணையின்படி, உத்தரகண்டின் ஹல்த்வானியில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளரான அங்கித்துடன் டோலி காதல் கொண்டிருந்தார், அதே நேரத்தில் மற்றொரு நபருடனும் அவர் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. டோலியும் அவரது இரண்டாவது காதலரும் சேர்ந்து, ஹோட்டலில் பாம்புக் கடிக்கு ஏற்பாடு செய்து அங்கித்தை கொலை செய்ய ஒரு திட்டத்தை வகுத்தனர் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | 11 அடி நீளமுள்ள சிறுத்தைத் தோல்கள் மற்றும் எலும்புகளுடன் கடத்தல்காரர்கள் கைது!


சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு பாம்பு பிடிக்கும் நபரை பணியமர்த்தியுள்ளனர். கொலைக்குப் பிறகு, டோலி பிலிபித்திற்கு தப்பிச் சென்றார், அங்கு அவர் நேபாளத்தில் உள்ள தனது வீட்டுப் பணிப்பெண்ணின் வீட்டில் தஞ்சம் புகுந்தார்.  போலீசார் அவரது நடமாட்டத்தை கண்டறிந்து, இறுதியில் டெல்லி செல்லும் பேருந்தில் பயணம் செய்த அவரை கைது செய்தனர்.


விசாரணையின் போது, டோலி முதலில் பரேலியில் இருந்து டெல்லிக்கு தப்பிச் சென்றதாகக் கூறினார். இருப்பினும், அவர் சரணனடைய முடிவெடுத்துள்ளார். ஹல்த்வானியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்வதற்கு முன்பு அவர் பல்வேறு உயர்தர ஹோட்டல்களில் தங்கியிருந்தார். ஆனால், அவர் அதைச் செய்வதற்கு முன்பே அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில், கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண் மற்றும் ஆண் வேலைக்காரனை அதிகாரிகள் இன்னும் தேடி வருகின்றனர்.


ஜூலை 15ஆம் தேதி காலை தீன்பனி ரயில்வே கிராசிங் அருகே அங்கித்தின் காரின் பின் இருக்கையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டபோது, இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பிரேதப் பரிசோதனையில் அவரது இரு கால்களிலும் பாம்பு கடித்த தடயங்கள் இருப்பது தெரியவந்ததால், மரணம் குறித்து சந்தேகம் எழுந்தது. தொடர் விசாரணையில், அங்கித்துடன் டோலியின் தொடர்பையும், கொடூரமான கொலை சதியில் அவரது பங்கையும் போலீசார் கண்டுபிடித்தனர்.விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.


மேலும் படிக்க | வாகனத்தை ஓட்டிக் கொண்டே சுய இன்பம்! பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ