Amazon Vs Future Retail - Reliance Deal: அமேசான்-ப்யூச்சர் க்ரூப்-ரிலையன்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் மற்றும் ஃபியூச்சர் ரீடெயில் லிமிடெட் (FRL) பின்னடைவை சந்தித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ. 24,713 கோடி மதிப்பிலான ரிலையன்ஸ் மற்றும் ஃபியூச்சர் ரீடெயில் இணைப்பு ஒப்பந்தத்தை தடை செய்ய வேண்டும் என அமெரிக்க E-Commerce நிறுவனமான அமேசான் (Amazon) இந்திய உச்ச நீதி மன்றத்திலும், சிங்கப்பூரின் நடுவர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தது. 


சிங்கப்பூரில், அமேசானுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில், இந்த தீர்ப்பு இந்தியாவில் (India) செல்லாது என கூறி அதை அமல்படுத்துவதை எதிர்த்து ப்யூச்சர் க்ரூப் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில், இன்றைய விசாரணையில், உச்ச நீதிமன்றம், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்ற தீப்பை ஏற்று அமல்படுத்த, இந்திய சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


ALSO READ | RBI Monetary Policy: வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை; பிற முக்கிய அம்சங்கள்ரிலையன்ஸ் பங்குகள் சரிந்தன


தீர்ப்பு குறித்த செய்தி வெளியான பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் இன்று கடுமையாக சரிந்தன. காலை 11.35 மணிக்கு, 43.95 புள்ளிகள் (2.06 சதவீதம்) குறைந்து 2089.35 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது. ஆரம்ப வர்த்தகத்தில் 2125.20 அளவில் தொடங்கியது. முந்தைய அமர்வில் அது 2133.30 என்ற அளவில் நிறைவசைந்தது. தற்போது நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ 1324531.55 கோடி.


2019 ஆம் ஆண்டில், ஃபியூச்சர் குழுமம் கடன் சுமையில் சிக்கி இருந்த போது, கிப்ட் வவுச்சர்கள் பிரிவில் 49% பங்குகளில் $ 1920 லட்சம் முதலீடு செய்து அமேசான் (Amazon) நிறுவனம், உதவியது. இந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் காரணமாக ப்யூச்சர் க்ரூப் வணிகத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய இயலாது என்று அமேசான் கூறுகிறது. 


ஒப்பந்த நிபந்தனைகளை மீறும் வகையில் பியூச்சர் குரூப் தனது வணிகம் மற்றும் பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முயலுவதால், அதை எதிர்த்து வழக்கு தொடுத்த அமேசான், அதில் வெற்றியும் பெற்றுள்ளது.


ALSO READ: 7th Pay Commission: டி.ஏ. உயர்வுக்குப் பிறகு யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? கணக்கீடு இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR