7th Pay Commission: டி.ஏ. உயர்வுக்குப் பிறகு யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? கணக்கீடு இதோ

குறைந்தபட்ச சம்பளத்திலும் அதிகபட்ச சம்பளத்திலும் அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியரின் சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம். 

Written by - ZEE Bureau | Last Updated : Aug 2, 2021, 05:28 PM IST
7th Pay Commission: டி.ஏ. உயர்வுக்குப் பிறகு யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? கணக்கீடு இதோ

7th Pay Commission: ஜூலை மாதம் 14 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி முடக்கத்தை நீக்குவதற்கான பெரிய முடிவு எடுக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் இந்த முடிவால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் செப்டம்பர் முதல் 28% அகவிலைப்படியைப் பெறத் தொடங்குவார்கள். ஆனால் இப்போது ஜூன் மாத அகவிலைப்படியையும் அரசாங்கம் விரைவில் சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கும் என்ற செய்தியும் வந்துகொண்டிருக்கின்றது. அப்படி நடந்தால், மொத்த அகவிலைப்படி 28% க்கு பதிலாக 31% ஆக உயரும்.

ஊதியத்தில் யாருக்கு எவ்வளவு உயர்வு இருக்கும்? 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர், அவர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் தரத்திற்கு ஏற்ப சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். 7 வது ஊதியக்குழு  (7th Pay Commission) மேட்ரிக்ஸ் படி, மத்திய அரசு ஊழியர்களின் நிலை -1 ன் சம்பள வரம்பில் குறைந்தபட்ச வரம்பு ரூ .18,000 ஆகவும் அதிகபட்ச வரம்பு ரூ .56900 ஆகவும் உள்ளது. 

அந்த வகையில் குறைந்தபட்ச சம்பளத்திலும் அதிகபட்ச சம்பளத்திலும் அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியரின் சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம். 

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 28% அகவிலைப்படியின் கணக்கீட்டை காணலாம்:

குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .18,000) கணக்கீடு:

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000

2. புதிய அகவிலைப்படி (28%) - ரூ .5040 / மாதம்

3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .3060 / மாதம்

4. அதிகரித்த அகவிலைப்படி - 5040-3060 = ரூ .1980/மாதத்திற்கு 

5. வருடாந்திர சம்பள உயர்வு - 1980X12 = ரூ 23760

ALSO READ: 7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு டி.ஏ உயர்வு எப்போது? விரைவில் பம்பர் செய்தி

அதிகபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .56,900) கணக்கீடு 

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .56,900

2. புதிய அகவிலைப்படி (28%) - ரூ .15,932/மாதம்

3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .9673 / மாதம்

4. அதிகரித்த அகவிலைப்படி - 15932-9673 = ரூ.6259 /மாதம் 

5. வருடாந்திர சம்பள உயர்வு - 6259X12= ரூ.75108

முன்னதாக, 2020 ஜனவரியில், அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2020 இல், 3 சதவிகிதம் அதிகரித்தது. இதற்குப் பிறகு, ஜனவரி 2021 இல் இது 4 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, இந்த மூன்று அதிகரிப்பால், அகவிலைப்படி மொத்தம் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இப்போது அது 28%ஐ எட்டியுள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவிகிதத்தை எட்டும் (17+4+3+4+3).

ஜூன் மாதத்திற்கான 3% டிஏ இன்னும் அதிகரிக்கவில்லை

ஜூன் 2021 க்கான அகவிலைப்படி (Dearness Allowance) இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2021 ஜனவரி முதல் மே வரையிலான AICPI தரவுகளிலிருந்து 3% அகவிலைப்படி மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. 3 சதவிகிதம் அதிகரித்த பிறகு, அகவிலைப்படி 31 சதவீதத்தை எட்டும். ஊழியர்களின் சம்பளம் மீண்டும் ஒரு முறை அதிகரிக்கும் என்பது உறுதி.

31% அகவிலைப்படியின் கணக்கீட்டை காணலாம்:

குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .18,000) கணக்கீடு:

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .18,000

2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ .5580/மாதம்

3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .3060 / மாதம்

4. அதிகரித்த அகவிலைப்படி - 5580-3060 = ரூ .2520/மாதம் 

5. வருடாந்திர சம்பள உயர்வு - 2520X12 = ரூ. 30,240

அதிகபட்ச அடிப்படை ஊதியத்தில் (ரூ .56,900) கணக்கீடு 

1. ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ .56,900

2. புதிய அகவிலைப்படி (31%) - ரூ . 17639/மாதம்

3. இதுவரையிலான அகவிலைப்படி (17%) - ரூ .9673 / மாதம்

4. அதிகரித்த அகவிலைப்படி - 17639-9673 = ரூ.7966 /மாதம் 

5. வருடாந்திர சம்பள உயர்வு -  7966X12= ரூ.95,592

எச்.ஆர்.ஏ உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளைச் சேர்த்த பின்னரே இறுதி சம்பளம் எவ்வளவு இருக்கும் என்ற கணக்கீடு வரும். மேலே அளிக்கப்பட்டுள்ள கணக்கீடு அகவிலைப்படி அதிகரித்த பிறகு ஊழியர்களின் (Central Government Employees) சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்ற அளவீடு மட்டுமே ஆகும்.

ALSO READ: 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படி 28%-லிருந்து 31 % ஆக உயரும்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News