புதுடெல்லி: கொரோனா வைரஸின் (Coronavirus) புதிய மாறுபாட்டான Omicron இன் அறிகுறிகள் டெல்டா மாறுபாட்டை (Delta Variant) விட விரைவில் காணப்படுகின்றன. Omicron காரணமாக நீங்கள் நோய்வாய்ப்படுவதற்கு முன்பே, அதன் அறிகுறிகளை நீங்கள் கேட்கலாம் மற்றும் உணரலாம் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Omicron தொற்றின் அடிப்படை அறிகுறிகள்
தி சன் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உங்களுக்கு தோண்டை புண் ஏற்பட்டு இருந்தால், அது கவலைக்குரிய விஷயமாக இருக்கலாம். உங்கள் குரலில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.


ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்


Omicron மாறுபாட்டின் இந்த பண்பு டெல்டாவிலிருந்து வேறுபட்டது
நிபுணர்களின் கூற்றுப்படி, Omicron முதல் அறிகுறிகளில் ஒன்று தொண்டை புண் ஆகும். அதேசமயம், டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்படும் போது தொண்டை புண் பிரச்சனையை மக்கள் கொண்டிருந்தனர். தென்னாப்பிரிக்காவின் டிஸ்கவரி ஹெல்த் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரியான் ரோச் கூறுகையில், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மூக்கடைப்பு, வறட்டு இருமல் மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.


இந்த கூற்று Omicron பற்றிய அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது
இருப்பினும், டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரான் குறைவான ஆபத்தானது என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. யுனைடெட் கிங்டமின் முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, டெல்டா மாறுபாட்டை விட 50 முதல் 70 சதவிகிதம் குறைவான மக்கள் Omicron நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


UKHSA தலைமை நிர்வாகி டாக்டர் ஜென்னி ஹாரிஸ் கூறுகையில், இதுவரை பூஸ்டர் டோஸ் எடுக்காத அனைத்து பிரிட்டிஷ் குடிமக்களும், ஒமிக்ரானைத் தடுப்பதற்கான சிறந்த வழி என்பதால், விரைவில் அதை எடுத்துக் கொள்ளுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளார். 


தலைவலி மற்றும் சோர்வு தவிர, இவை ஒமிக்ரானின் முக்கிய அறிகுறிகளாகும்
தலைவலி மற்றும் சோர்வு தவிர, ஒமிக்ரானின் பல அறிகுறிகள் உள்ளன. இந்த மாறுபாடு டெல்டாவைப் போல தீவிரமானது அல்ல என்று நம்பப்படுகிறது. ஒமிக்ரானின் சில பொதுவான அறிகுறிகளில் லேசான காய்ச்சல் அடங்கும், இருப்பினும் அது தானாகவே சரியாகிவிடும். இது தவிர, தொண்டையில் குத்துதல் மற்றும் உடலில் அதிக வலி ஆகியவை ஒமிக்ரானின் சிறப்பு அறிகுறிகளாகும். சிறப்பு விஷயம் என்னவென்றால், கொரோனா வைரஸைப் போலவே, இந்த வகையிலும் சுவை மற்றும் வாசனை இழப்பு போன்ற அறிகுறிகள் எதுவும் இல்லை.


ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR