டெல்லியில் நடந்த  நிதி ஆயோக் கூட்டத்தில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற சந்திரபாபுவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி தலைமையில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் நிடி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில், கலந்து கொண்டு பேசிய ஆந்திரா முதல்வர் சந்திரபாபு,,!


ஆந்திரா மாநில பிரிவினை, சிறப்பு அந்தஸ்து வழங்காதது, ஜிஎஸ்டி, பொல்லாவரம் திட்டம் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினார். 


இதற்கு ஆதரவு தெரிவித்து பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில்,,! ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற சந்திரபாபுவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அதேபோல், பீஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்றார். 


மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறும்போது,,! 2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதிஒதுக்கீடு என்ற 15-வது நிதிக்குழுவின் கோரிக்கை ஏற்று சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தண்டிக்கக்கூடாது என்ற சந்திரபாபுவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


இந்த ஆலோசனைக்கு முன்னதாக சந்திரபாபு, நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆந்திர அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ஆகியோரை அழைத்து சந்திரபாபு நாயுடு கடந்த 2 நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார். 


தொடர்ந்து தனக்கு ஆதரவு தரும்படி, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டில்லி வந்துள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரையும் சந்திரபாபு நேற்று சந்தித்து பேசி உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.