Bihar Floor Test News In Tamil: இன்று பீகார் சட்டசபையில் நிதீஷ் குமார் அர்சு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதற்காக அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்துள்ளனர். பீகாரிலும் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளார். பீகாரில் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சியின் ஒரே எம்எல்ஏ அக்தாருல் இமான் ஆவார். அவரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள சட்டசபைக்கு வந்துள்ளார். நிதிஷ் குமார் தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தனது நிலைப்பாட்டை அக்தருல் இமான் தெளிவுபடுத்தி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்.எல்.ஏ அக்தருல் இமான் பீகார் சட்டசபைக்கு சற்றுமுன் வந்தார். அப்பொழுது அவரிடம் செய்தியளர், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது உங்க கட்சிக்கு யாருக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்ற கேள்விக்கு அவர், "நாங்கள் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வாக்களிப்போம்" என்பது தான் ஏஐஎம்ஐஎம் கட்சியின் நிலைப்பாடு என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்" எனப் பதில் அளித்தார்.


நிதிஷ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்


கடந்த மாதம் நிதிஷ்குமார் ஆர்ஜேடி உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். அதன்பிறகு நிதீஷ்குமார் பீகார் முதல்வராக 9வது முறையாக பதவியேற்றார். கடந்த 15 நாள் ஆட்சிக்கு பிறகு பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு இன்றைய (திங்கள்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.


மேலும் படிக்க - Bihar: நிதிஷ்குமார் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா?


என்.டி.ஏ-விடம் பெரும்பான்மை உள்ளது- நிதிஷ் குமார்


நிதிஷ் குமார் அரசின் முக்கிய நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, எம்.எல்.ஏ.க்கள் பீகார் சட்டசபைக்கு வந்துள்ளனர். ஜே.டி.யு எம்.எல்.ஏ.க்கள் சபைக்குள் நுழைந்தவுடனே எங்களுக்கு தான் வெற்றி எனக் கூறினார்கள். .


ஜேடியு தலைவர் நீரஜ் குமார் கூறுகையில், 'பெரும்பான்மை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அவையில் இருந்து வெளியேறி, துணை சபாநாயகர் தலைமை தாங்குவார் எனக் கூறினார்.


ஜங்கல் ராஜ்ஜியம் மீண்டும் திரும்பாது -பாஜக


பீகார் மாநில பா.ஜ., தலைவர் ஷாநவாஸ் உசேன் கூறுகையில், "நிதீஷ் குமார் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும். எதிர்க்கட்சிகள் என்ன செய்தாலும் எதுவும் நடக்காது. பீகாரில் ஜங்கல் ராஜ்ஜியம் மீண்டும் திரும்பாது" என்றார். 


மேலும் படிக்க - INDIA கூட்டணியில் இருந்து விலகிய காரணம்... ராகுல் காந்தி செய்த அந்த காரியம் - நிதிஷ் குமார் தடாலடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ