Bihar: நிதிஷ்குமார் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா?

Bihar Latest News In Tamil: பீகார் அரசியலில் இன்று ஒரு முக்கியமான நாள். இன்று சட்டசபையில் நிதிஷ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 12, 2024, 12:32 PM IST
Bihar: நிதிஷ்குமார் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா? title=

Bihar Floor Test: கடந்த 15 நாள் ஆட்சிக்கு பிறகு பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு இன்று (திங்கள்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவுள்ளது. கடந்த மாதம் நிதிஷ்குமார் ஒன்பதாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். பீகார் மாநிலத்தின் மகா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி பாரதிய ஜனதா கட்சியின்  ஆதரவுடன் பீகார் மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைத்தார். இந்நிலையில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். நிதிஷ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றுமா அல்லது பீகார் அரசியலில் புதிய அரசியல் ஆட்டம் நிகழுமா என அனைவரின் பார்வையும் உள்ளது. 

தங்கள் எம்.எல்.ஏ.க்களை கண்காணிப்பில் வைத்திருந்த ஜேடியு-பாஜக 

பீகார் மாநிலத்தில் 'அரசியல் ஸ்திரமற்ற' சூழ்நிலையாகக் காணப்படுவதைத் தொடர்ந்து, நிதிஷ் குமார் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம்-யுனைடெட் (ஜேடி-யு) கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்டாயம் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு உள்ளது. மறுபுறம் பாஜக தனது எம்எல்ஏக்களை போத்கயாவில் உள்ள மகாபோதி ரிசார்ட்டுக்கு அனுப்பியது. ஜேடியு மற்றும் பாஜக கட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தன. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன், இரு கட்சிகளும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை கண்காணிப்பில் வைத்திருந்தன.

எம்.எல்.ஏக்களை ஐதராபாத்திற்கு அனுப்பிய காங்கிரஸ்

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்காமல் இருக்க காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்களை ஐதராபாத்திற்கு அனுப்பியது. ஐதராபாத்தில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாட்னா திரும்பியுள்ளனர். அதேபோல முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் முகாமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க - INDIA கூட்டணியில் இருந்து விலகிய காரணம்... ராகுல் காந்தி செய்த அந்த காரியம் - நிதிஷ் குமார் தடாலடி!

பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை -நிதிஷ்

இதற்கிடையில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு, சட்டசபையில் பெரும்பான்மையை எளிதாக நிரூபிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த மற்ற எம்எல்ஏக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று கூறியுள்ளனர். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ.) இணைந்துள்ளதாகவும், நிரந்தரமாக அக்கூட்டணியில் நீடிப்பதாகவும் நிதிஷ்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

நிதிஷ் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஹெச்ஏஎம்-எஸ்

பீகார் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (ஹெச்ஏஎம்) நிறுவனருமான ஜிதன் ராம் மஞ்சி, பீகார் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ​​என்.டி.ஏ அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, தனது கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.  

பீகார் சட்டசபை நிலவரம்

பீகார் சட்டசபையின் மொத்த பலம் 243 ஆகவும், பெரும்பான்மை எண்ணிக்கை 122 ஆகவும் உள்ளது. 78 பிஜேபி எம்எல்ஏக்கள், 45 ஜேடி-யு, 4 ஹெச்ஏஎம் மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ உட்பட மொத்தம் 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு என பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு என்டிஏ வசம் உள்ளது. எதிர்க்கட்சி வரிசையில், ஆர்ஜேடி 79, காங்கிரஸிலிருந்து 19, சிபிஐ-எம்எல் 12, சிபிஐ-எம் 2, சிபிஐ-2 உட்பட 114 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

மேலும் படிக்க - 'INDIA கூட்டணி இருக்கே...' ராஜினாமாவுக்கு பின் நிதிஷ் குமார் போட்ட திடீர் குண்டு - அடுத்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News