Bihar Lok Sabha Election Results 2024 Latest Update: நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள்  பதிவு நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  பீகாரில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில், மாநிலத்தில் நிதிஷ் குமார் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை, நிதிஷ் மற்றும் பா.ஜ., கூட்டணி இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள்:


பீகார் மாநிலத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 


- ஜனதா தளம் (ஐக்கிய) 15  முன்னிலை


- பாரதிய ஜனதா கட்சி 13  முன்னிலை


- ராஷ்ட்ரிய ஜனதா தளம் 3 இடங்களில் முன்னிலை


- இந்திய தேசிய காங்கிரஸ் 1இடத்தில் முன்னிலை


- லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களில் முன்னிலை


- மற்றவைகள் 10 இடங்களில்  முன்னணி


தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், பிஜேபி 13 முதல் 15 இடங்களையும், ஜேடியு 9 முதல் 11 இடங்களையும், சிராக் பாஸ்வானின் கட்சி எல்ஜேபிஆர் ஐந்து இடங்களையும் பெறும் என கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான இந்தியா பிளாக் பற்றி பேசுகையில், ஆர்ஜேடிக்கு 6 முதல் 7 இடங்களும், காங்கிரசுக்கு ஒன்று முதல் இரண்டு இடங்களும் கிடைக்கலாம் என கூறப்பட்டது. 


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் என்டிஏ 48 சதவீத வாக்குகளையும், இந்தியா பிளாக் 42 சதவீத வாக்குகளையும் மற்றவர்களுக்கு 10 சதவீத வாக்குகளையும் பெறும் என்று கணித்துள்ளது. கட்சிகள் பெறும் வெற்றி விபரங்களை பொறுத்தவரை, இந்த கருத்துக்கணிப்பில் ஆர்ஜேடி அதிகபட்சமாக 24 சதவீத வாக்குகளையும், பாஜக 21 சதவீத வாக்குகளையும், ஜேடியு 19 சதவீத வாக்குகளையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜேபிக்கு 6, காங்கிரஸ் 10 சதவீத வாக்குகளைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் பாஜகவிற்கு எத்தனை மக்களவை தொகுதிகள் கிடைக்கும்?


40 தொகுதிகளில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு


பீகாரில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக பீகாரில் ஏப்ரல் 19-ம் தேதி 4 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 5 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ம் தேதியும், 3-வது கட்டமாக 5 தொகுதிகளுக்கும் மே 7-ம் தேதியும், நான்காம் கட்டமாக 5 தொகுதிகளுக்கு மே 13-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. . ஐந்தாம் கட்டமாக ஐந்து இடங்களுக்கு மே 20ஆம் தேதியும், ஆறாவது கட்டமாக 8 இடங்களுக்கு மே 25ஆம் தேதியும், 8 இடங்களுக்கு ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக ஜூன் 1ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.


மேலும் படிக்க | Tamil Nadu Lok Sabha Election Result: மக்களவை தேர்தலில் திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ