பீகார் பொதுச் சேவை ஆணையத்தின் (BPSC) வளாகத்தில் பீகாரின் முதல் அனைத்து மகளிர் ஊழியர் தபால் நிலையத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சனிக்கிழமை திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரசாத், தற்போது துவக்கிவைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் முழுவதும் மகளிர் மட்டுமே செயல்படுவர் .


தலைமை அதிகாரி முதல் தபால்களை வினியோகம் செய்பவர்கள் வரை மகளிர் மட்டுமே பணியில் ஈடுபடுவர்.மேலும்மாநிலஅரசு பணி தேர்வாணையத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்த மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் உதவி செய்யும் என தெரிவித்தார்.


இந்நிகழ்வினை தொடர்ந்து மாநிலத்தின் முதலாவது ஆதார் கேந்திர மையத்தை அவர் துவக்கிவைத்தார். இது நாட்டின் 10-வது ஆதார் கேந்திர மையம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் தெரிவிக்கையில்., நாள் தோறும் இந்த ஆதார் கேந்திர மையம் ஆயிரம் ஆதார் கார்டுகளை வழங்க கூடியவை. விரைவில் இவை 3 ஆயிரம் சதுர அடி அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார்.


இந்தியாவின் முதல் மகளிர் மட்டும் போஸ்ட் ஆபிஸ் புதுடில்லியில் கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துவக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் பீகாரின் முதல் அனைத்து மகளிர் ஊழியர் தபால் நிலையத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சனிக்கிழமை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.