பாட்னா: மாநிலத்தில் பருவமழை தீவிரமாக வருவதால் அடுத்த 36 மணி நேரம் பீகாரில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முழு மாநிலத்திலும் குறிப்பாக வட-மத்திய மற்றும் வடகிழக்கு பீகாரில் அமைந்துள்ள இடங்களில் பலத்த மழை பெய்ய வானிலை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு-கிழக்கு சாம்பரன், கோபால்கஞ்ச், சிவான், அரேரியா, கிஷன்கஞ்ச் மற்றும் வேறு சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் லைட்டிங் ஸ்ட்ரோக் எச்சரிக்கையும் வழங்கப்படுகிறது.


 


READ | கடும் வெப்பத்தை தணிக்க வந்துவிட்டது பருவ மழை... எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?


 


மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பீகாரில் இந்த ஆண்டு 92 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28, 2020) மாநிலத்தில் 24 மி.மீ க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.


ஜூன் மாதத்தில் மாநிலத்தில் இன்று வரை 275 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பொதுவாக, இந்த காலகட்டத்தில் மாநிலத்திற்கு 144 மி.மீ மழை பெய்யும்.


ஜூன் 6 முதல் இந்த எட்டு மாவட்டங்களில் 300 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பதிவாகியுள்ளது


கிஷன்கஞ்ச் 611


அரேரியா 509


பூர்னியா 485


சுபால் 365


இ சம்பரன் 326


கோபால்கஞ்ச் 311


சரண் 304


பி.சம்பரன் 300


இந்த இடங்களில் பலத்த காற்றோடு மழையும் மாநிலத்தின் வெப்பநிலையை நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைத்துள்ளது.