பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் எதை அணிவது என்பது பெண்களின் உரிமை: பிரியங்கா காந்தி
வகுப்பறைகளில் ஹிஜாப் அணியும் கல்லூரி மாணவர்களின் உரிமைக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் போராட்டங்கள் கர்நாடகாவின் உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் மாண்டியா மாவட்டங்களில் பல நகரங்களில் வெடித்தன.
பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் போன்ற உடை அணிவது என்பது பெண்களின் உரிமை ஆகும். அதேபோல் அவர்களின் உடை உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | Hijab Row: ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தனி வகுப்பறை - தீவிரமடையும் போராட்டங்கள்!
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா உள்பட பல்வேறு தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தியும் கருத்து தெரிவித்து உள்ளார். அதன்படி பெண்கள் ஹிஜாப், ஜீன்ஸ், பிகினி உள்பட எந்த உடை அணிவது என்பது முடிவு எடுக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு அந்த உரிமையில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை என்றும் எனவே பெண்களின் உடையை காரணம்காட்டி துன்புறுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள் என்றும் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த ட்விட்டர் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள பாஜகவின் காயத்ரி ரகுராம், பெண்களின் உடை உரிமை என்பது பொதுவெளியில், மாலில், பீச், பார்க் செல்லும்போது வைத்துக் கொள்ளலாம் ஆனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் போது பள்ளி கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.
மேலும் படிக்க | பயங்கரவாதிகளை விட கொடியவர்கள் பெண்கள் -முன்னாள் ஆபாச நடிகை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR