பயங்கரவாதிகளை விட கொடியவர்கள் பெண்கள் -முன்னாள் ஆபாச நடிகை!

ஆபாச திரைப்படங்களின் மூலம் ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்களின் முக்கியமானவர் மியா கலிப்பா. அதிலும் குறிப்பாக அவர் இஜாப் அணிந்துக்கொண்டு பாலியல் காட்சியில் நடித்ததாக அவருக்கு பல பயங்கரவாத அமைப்புகளில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated: Oct 6, 2019, 04:44 PM IST
பயங்கரவாதிகளை விட கொடியவர்கள் பெண்கள் -முன்னாள் ஆபாச நடிகை!

ஆபாச திரைப்படங்களின் மூலம் ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்களின் முக்கியமானவர் மியா கலிப்பா. அதிலும் குறிப்பாக அவர் இஜாப் அணிந்துக்கொண்டு பாலியல் காட்சியில் நடித்ததாக அவருக்கு பல பயங்கரவாத அமைப்புகளில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பிரபல தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தான் பங்கெடுத்த வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் பயங்கரவாதிகளை(Daesh) விட பயங்கரமானது எது என மியா கலிப்பாவிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்ப, அதற்கு அவர் பயங்கரவாதிகளை (Daesh*) விட பயங்கரமானது, ஒரு தனி அறையில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத பெண்களுடன் தனிமையில் இருப்பது தான் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

(குறிப்பு: Daesh* என்பது ISIL/ISIS/IS/Islamic State போன்ற ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை குறிக்கும் சொல் ஆகும்)

LINK IN MY BIO 

A post shared by Mia K. (@miakhalifa) on

இந்த நிகழ்ச்சியின் போது மியா கலிப்பா தான் ஏன் ஆபாச திரைப்பட துறையில் இருந்து விலகினார் எனவும், பயங்கரவாதிகளால் தனக்கு ஏற்பட்ட கொலை மிரட்டல் சம்பவங்கள் பற்றியும் பகிர்ந்துக்கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்னர், மியா கலிப்பா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தான் ஆபாச திரைப்பட தொழிலில் மூன்று மாதங்கள் மட்டுமே பணியாற்றினார் எனவும், இந்த தொழிலின் மூலம் தான் சம்பாதித்த பணம் சொற்ப அளவே எனவும் மனம் திறந்தார். இருப்பினும் இவர் 2018-ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட வயது வந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.