குஜராத் மாநிலம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் கன்வர்ஜி பவாலியா அமோக வெற்றி பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம், ஜஸ்டன் சட்டசபை தொகுதிக்கு கடந்த 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் தற்போது கன்வர்ஜி பவாலியா போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் அவ்சார் நாக்கியா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.


குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்தவர் கன்வர்ஜி பவாலியா. ஜஸ்டன் தொகுதியில் 5 முறை நின்று வெற்றி பெற்றவர் இவர். மேலும் நாடாளுமன்ற எம்.பி யாகவும் ஒருமுறை இருந்துள்ளார். சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தார். மேலும் தான் வகித்து வந்த MLA பதவியினையும் ராஜினாமா செய்தார், இதனையடுத்து இத்தொகுதியில் கடந்த 20-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.



இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று என்னப்பட்டது. வெளியான முடிவுகளின் படி கன்வர்ஜி பவாலியா 19,979 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் அவ்சார் நாக்கியாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.


முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்த கன்வர்ஜி பவாலியா, நடப்பு தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜஸ்டன் சட்டசபை தொகுதியில் 1995, 1998, 2002, 2007 மற்றும் 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றவர். கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் இவர் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


பின்னர், காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் திடீரென பாஜகவில் இணைந்தார். இணைந்தவுடன் அன்றைய தினமே அம்மாநில அமைச்சரவையில் கன்வர்ஜி பவாலியா இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.