புதுடெல்லி: கர்நாடகா மாநிலத்தைத் தாண்டி கடந்த காலங்களில் தென் இந்தியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான பாஜக எடுத்த அனைத்து முயற்சிகளும் அவர்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. ஆனாலும் தனது முயற்சிகளை கைவிடும் மனநிலையில் பாஜகவும் இல்லை. இந்தமுறை ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால், இது பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜகவின் உயர்மட்டத் தலைமை, கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழுவில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 பொதுத் தேர்தல்களுக்கான கட்சியின் தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்க உள்ளனர். இதில் "மிஷன் சவுத்" மூலம் தென் இந்திய மாநிலங்களில் பா.ஜ.க.வின் அடுத்தக்கட்டத் திட்டம் என்ன என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிஷன் சவுத் -பாஜக திட்டம்:
வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை விரிவுப்படுத்தி உள்ள நிலையில், மீண்டும் தெற்கில் கவனம் செலுத்த முனைகிறது. அதாவது 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் 'மிஷன் சவுத்' (Mission South) திட்டம் மூலம் மேற்கொண்டு வருகிறது. 


மேலும் படிக்க: திமுக அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது... ஆனால் முதல்வருக்கு தொடர்பில்லை - அண்ணாமலை!


தெலுங்கானாவை குறி வைக்கும் பாஜக:
கர்நாடகாவிற்குப் பிறகு தெலுங்கானா மாநிலத்தில் பாஜக ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கும் இரண்டாவது தென்னிந்திய மாநிலமாகும். இங்கு சமீபத்தில் நடந்த சில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானாவில் பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்கள் மற்றும் 4 எம்பிக்கள் உள்ளனர். 2023 சட்டசபைத் தேர்தலில் டிஆர்எஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற போட்டியிடும், அதே நேரத்தில் பிஜேபி, "இந்துத்துவா அரசியலை" கையில் எடுக்கும், ஆளும் கட்சியாக இருக்கும் கேசிஆர் அரசுக்கு எதிராக வழக்கமான அரசியல் தாக்குதல்கள் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தில் பாஜகவை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன் வியூகம் வகுத்து திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிகின்றன. இது பாஜக மற்றும் டிஆர்எஸ் இடையே கடுமையான போட்டிக்கு மேலும் வழிவகுக்கும்.


ஐதராபாத்தில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஏன்:
தென்னிந்திய மாநிலங்களில் பாஜக அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 2014ல் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, பெங்களூரு மற்றும் கேரளாவுக்குப் பிறகு தென்னிந்தியாவில் பாஜகவின் மூன்றாவது தேசிய செயற்குழு கூட்டம் இதுவாகும். 'மிஷன் சவுத்' (Mission South) திட்டத்தின் ஒரு பகுதியாக, டிஆர்எஸ்-க்கு வலுவான, சாத்தியமான மாற்றாக உருவெடுக்கும் முயற்சியின் காரணமாகவே பாஜக தனது தேசிய செயற்குழுக் கூட்டத்தை ஐதராபாத்தில் நடத்துகிறது.


மேலும் படிக்க: 2026 தேர்தலில் பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் வெல்வார்கள் - அண்ணாமலை நம்பிக்கை


கேரளாவை குறி வைக்கும் பாஜக:
நடந்து முடிந்த கேரளா சட்டமன்றத் தேர்தலில் "மெட்ரோ மேன்" ஸ்ரீதரனை களமிறக்கினாலும், எதிர்பார்த்த தாக்கத்தை பாஜகவால் ஏற்படுத்த முடியவில்லை, மீண்டும் இடதுசாரிகள் கேரளாவி ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் இந்தமுறை கேரளாவில் காலடி எடுத்து வைப்பதற்கு, பிரச்சினை சார்ந்த வியூகத்தை பாஜக தயாரித்துள்ளதாகத் தகவல்.


பாஜக திட்டம் - தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா:
2019 நாடாளுமன்றத் தேர்தலில் இழந்த 144 மக்களவைத் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஆளும் அரசுகளுக்கு எதிராக வலுவான பிரச்சனையை எழுப்ப திட்டங்களைத் தீட்டியுள்ளது.


தென் மாநிலங்களில் பாஜகவின் "பிளான் சவுத்" திட்டம்:
தமிழ்நாட்டில் மக்களவை இடங்கள்: 39 
கேரளாவில் மக்களவை இடங்கள்: 20
கர்நாடகாவில் மக்களவை இடங்கள்: 28
தெலுங்கானாவில் மக்களவை இடங்கள்: 17 
ஆந்திர பிரதேசத்தில் மக்களவை இடங்கள்: 25


மேலும் படிக்க: பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி: தேவகவுடாவும் சந்திரசேகர் ராவும்


தெற்கில் உள்ள இந்த ஐந்து மாநிலங்களின் அனைத்து மக்களவைத் தொகுதிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 120-க்கும் அதிகமாக இருக்கும். அதில் பாஜக 100 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், இந்த அனைத்து மாநிலங்களிலும் "பிளான் சவுத்" கீழ் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் இலக்கான இந்த மாநிலங்களில் பிடியை வலுப்படுத்த முடியும்.


தேசிய செயற்குழு கூட்டத்தின் முக்கியத்துவம்:
உ.பி., உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருந்தபோது, 2021 நவம்பரில், பாஜகவின் கடைசி தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. ஐந்து மாநிலங்களில் 4ல் பாஜக வெற்றி பெற்றது.


மேலும் படிக்க: தேசிய கொடியெல்லாம் இல்லை இனி காவி கொடிதான் - சர்ச்சையை கிளப்பிய பாஜக தலைவர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR