”செந்தமிழ் நாடெனும் போதினிலே” தமிழில் உரையை தொடங்கிய மோடி..!

PM Modi In Chennai: தமிழகத்தில் 31 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

Written by - Dayana Rosilin | Last Updated : May 27, 2022, 02:30 PM IST
  • செந்தமிழ் நாடெனும் போதினிலே
  • தமிழில் உரையை தொடங்கிய மோடி
  • நாட்டு மக்களுக்கு திட்டங்களை அர்ப்பணித்தார்
”செந்தமிழ் நாடெனும் போதினிலே” தமிழில் உரையை தொடங்கிய மோடி..! title=

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம் எனக்கூறி உரையை தொடங்கினார். செந்தமிழ் நாடெனும் போதினிலே என பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டிய அவர், தமிழகம் மிகவும் சிறப்பான பூமி என பெருமிதம் தெரிவித்தார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ.116 கோடி மதிப்பீட்டில்1152 வீடுகள்  கட்டப்பட்டுள்ள  நிலையில், பயனாளிகளுக்கு வழங்கினார். 

மேலும் படிக்க | LIVE: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி

தொடர்ந்து உரையாற்றி பிரதமர் மோடி, தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் உலகளாவியது எனவும், தமிழ் மக்கள் மிகவும் அற்புதமானவர்கள் எனவும் குறிப்பிட்டார். அது மட்டுமின்றி உலக அளவில் எந்தவொரு துறை எடுத்துக்கொண்டாலும் அங்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு நபர் கண்டிப்பாக இருக்கிறார் எனவும் பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ் நாட்டின் வளர்ச்சி திட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் ஒரு மைல் கல்லாக இருக்கும் என குறிப்பிட்டார். 

அது மட்டுமின்றி சாலை விரிவாக்கப்பணி, ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்படவுள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் கட்டாயம் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் என குறிப்பிட்ட மோடி இதனால் தமிழக மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் கூறினார். மேலும் இந்த திட்டங்கள் பொதுமக்களுக்கு இரட்டிப்பாண பலனளிக்கும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார். 

இலங்கை மக்களுக்கு இந்திய அரசு கட்டாயம் துணை நிற்கும் என தெரிவித்த மோடி, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொடரும் எனவும் கூறினார். யாழ்பானத்திற்கு கடந்த ஆண்டு நான் சென்றேன். அங்கு சென்ற முதல் பிரதமர் நான்தான் என்ற பெருமை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.  உள்கட்டமைப்பு என்று கருதப்படும் விஷயங்களையெல்லாம் தான்டி, மத்திய அரசு மக்களின் நலனை சிந்தித்து செயல்பட்டு வருகிறது என தெரிவித்த மோடி, தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு மேலும் ஒருமுறை வாழ்த்து தெரிவிப்பதாக கூறி நன்றி என தெரிவித்து உரையை முடித்துக்கொண்டார். 

மேலும் படிக்க | ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல்: முன்னாள் முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News