மோடி - அம்பேத்கர் ஒப்பீடு... தேசிய அளவில் இளையராஜாவுக்கு வலுக்கும் ஆதரவு
மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்ட விவகாரத்தில் இளையராஜாவுக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள். மோடியின் ஆட்சியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்” என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக மாறி இருக்கிறது. மேலும், இளையராஜா இந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென பலர் வலியுறுத்தினர். ஆனால், கருத்தை பின்வாங்கப்போவதில்லை என்பதில் இளையராஜா தெளிவாக இருக்கிறார்.
இதற்கிடையே அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதுமட்டுமின்றி இளையராஜாவுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியை வழங்க பாஜக முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.
மேலும் படிக்க | பாஜக சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார் இளையராஜா..! அதுவும் எந்த ரூட்டில் தெரியுமா?
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இளையராஜாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அவமதிப்பதா? இளையராஜாவின் கருத்து பிடிக்கவில்லை என்றால் விமர்சிப்பதா? இதுதான் ஜனநாயகமா?
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் எதிரான கருத்தை தெரிவித்தால் எதிர்ப்பதா? ஆதரவாக பேசவில்லை என்பதால் அவரை விமர்சிப்பது நிச்சயம் தவறான அணுகுமுறை. கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR