ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.   

Written by - K.Nagappan | Last Updated : Apr 18, 2022, 02:10 PM IST
  • ஆளுநர் பழக இனிமையானவர்.
  • உரிய மரியாதையை ஆளுநர் அளித்து வருகிறார்
  • அரசியலைக் கடந்து பண்பாட்டைப் பாதுகாப்போம்
ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்  title=

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். 

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார். ஆனால், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை. 

இது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “நீட் விவகாரம் குறித்து எந்த உத்திரவாதத்தையும் ஆளுநர் அளிக்கவில்லை. இன்றைய சந்திப்பின் பொழுது, மத்திய அரசிற்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைப்பதற்கான காலவரையறையும் ஆளுநர் தெரிவிக்கவில்லை. மாணவர்கள், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவிற்கு மதிப்பளிக்கும் வகையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது வருத்தமளிக்கிறது. இதனால் தேநீர் விருந்தைப் புறணக்கணிக்கிறோம்” எனக் கூறினார்.

மேலும் படிக்க | ஆளுநருடன் சுமூக உறவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காதது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பின் சட்டப்பேரவை இன்று கூடியது. பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது தேநீர் விருந்தைப் புறக்கணித்தது குறித்து விளக்கம் அளித்தார்.  

''நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த மசோதா ஆளுநர் மாளிகை வளாகத்தில் தூங்கிக் கிடக்கிறது. இதுவரை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.
 
இந்த நிலையில்  நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் சட்டப்பேரவையின் மாண்பை மதிக்காமலும் காலம் தாழ்த்தியதன் காரணமாகவே ஆளுநருடனான தேநீர் சந்திப்பைப் புறக்கணித்தேன். மேலும் இதுகுறித்து அவரிடம் விளக்கம் அளித்துள்ளோம். ஆளுநருக்கும் தனக்கும் இடையே எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை.

ஆளுநர் பழக இனிமையானவர். எங்களுக்கு உரிய மரியாதையை ஆளுநர் அளித்து வருகிறார். நாங்களும் அதற்கு உரிய மரியாதையை அளித்து வருகிறோம். அரசியலைக் கடந்து பண்பாட்டைப் பாதுகாப்போம். 

50 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏராளமான பொது வாழ்வில் களையும் ஏராள மான அவமானங்களையும் சந்தித்து விட்டேன் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் செயல் பணி செய்து கிடப்பதே. எனக்கு அவமானம் ஏற்பட்டாலும் தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்குமாயின் அதனை ஏற்கத் தயாராக உள்ளேன்.  நீட் விலக்கு மசோதா அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தேவைப்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு எடுக்கப்படும்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

மேலும் படிக்க | சேவை குறைபாடு : ஐசிஐசிஐ, ஏர்டெல்லுக்கு அபராதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News