COVID-19 காரணமாக தாமதமான CAA விரைவில் அமல்படுத்தப்படும்: J.P.Nadda
2021 ல் நடைபெறும் மாநில சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்று அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
சிலிகுரி( SILIGURI): கொரோனா தொற்றுநோய் காரணமாக குடியுரிமை (திருத்த) சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே பி நாடா திங்கள்கிழமை (BJP national president J P Nadda) தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் (West Bengal) வடக்கு பகுதியில் உள்ள சமூகக் குழு கூட்டத்தில் பேசிய நட்டா, மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜி அரசாங்கம் தனது கட்சியின் அரசியல் ஆதாயங்களுக்காக பிரித்தாளும் சூழ்ச்சியை கடைப்பிடிக்கிறது. ஆனால், பாஜக அனைவரின் வளர்ச்சிக்காகவும் வேலை செய்கிறது என்றார்.
2021 ல் நடைபெறும் மாநில சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக (BJP) அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்று அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
“நீங்கள் அனைவரும் குடியுரிமை (திருத்த) சட்டத்தின் பலன்களைப் பெறுவீர்கள். இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாங்கள் அதை அம்பபடுத்துவதில், உறுதியுடன் இருக்கிறோம், ”என்று அவர் கூட்டத்தில் கூறினார்.
ALSO READ | இந்திய எல்லையில் நுழைந்த சீன படை வீரர்.. சிறை பிடித்த இந்திய ராணுவம்..!!!
"COVID-19 தொற்றுநோய் காரணமாக,குடியுரிமை திருத்த சட்டமான CAA-வை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் நிலைமை மேம்பட்டு வருவதால், பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, இப்போது விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. CAA மிக விரைவில் அமல்படுத்தப்படும்" என்று நட்டா மேலும் கூறினார்.
திரிணமுல் காங்கிரஸ் அரசின் வன்முறை மற்றும் கட் மணி (cut-mone) கலாச்சாரத்தால், அதாவது அரசாங்க திட்டத்தை அமல்படுத்த கமிஷன் வாங்கும் பழக்கம், ஆகியவற்றால், மாநில மக்கள் சோர்வடைந்து வருவதால், 2021 ஆம் ஆண்டு மாநில சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் பாஜக அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
2021 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, கட்சி நிர்வாக ரீதியிலான நடவடிக்கையை ஆய்வு செய்ய, ஒரு நாள் பயணத்தில் இருக்கும் நட்டா, வடக்கு பிராந்தியத்தின் பாஜக தலைவர்கள் மற்றும் சமூக மற்றும் மத குழுக்களுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தினார்.
ALSO READ | ரயில்வே அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்.. லட்சக்கணக்கில் சம்பாதிக்க வாய்ப்பு..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe