லே (லடாக்) : லடாக்கின் (Ladakh) சுமர்-டெம்சோக் (Chumar-Demchok) பகுதியில் சீன ராணுவ வீரர் ஒருவர் இந்திய பாதுகாப்பு படையினரால் திங்கள்கிழமை காலை பிடிபட்டார். கார்போரல் வாங் யா லாங் (Corporal Wang Ya Long) என அடையாளம் காணப்பட்ட சீன மக்கள் விடுதலை இராணுவத்தினரை (PLA), ஏற்கனவே அமலில் இருக்கும் நெறிமுறையின்படி சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்று இந்திய ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனா ராணுவத்தை சேர்ந்த இவர் எல்லைப்பகுதி (LAC) வழியாக வழிதவறி வந்ததாக நம்பப்படுகிறது, மேலும் இந்திய இராணுவத்தால் கைது செய்யப்படும்போது,அவருக்கு மருத்துவ உதவி மற்றும் உணவு மற்றும் கதகதப்பான ஆடைகள் ஆகியவை வழங்கப்பட்டன.
காணாமல் போன சிப்பாய் இருக்கும் இடம் குறித்து சீன தரப்பில் தகவல் கோரப்பட்டது. தற்போதுள்ள நெறிமுறைகளின்படி, சுஷுல் - மோல்டோ சந்திப்பு இடத்தில் சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என இந்திய ராணுவம் கூறியுள்லது.
ALSO READ | பெண்ணுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாம் அகதிக்கு ஜெர்மனி வழங்கிய தண்டனை என்ன தெரியுமா..!!!
கார்போரல் வாங் தன்னுடன் சிவில் மற்றும் இராணுவ ஆவணங்களை வைத்திருந்ததாகவும் செய்திகள் வந்தன.
இந்திய சீன எல்லையில் உள்ள பதற்றத்தத்தை தணிக்க இரு நாடுகளுக்கு இடையில் எட்டாவது சுற்று கமாண்டர்-நிலை பேச்சுவார்த்தைக்கு முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வாரம் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், குளிர் காலம் நெருங்கி வரும் நிலையில், கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக் கொள்ளும் செயல்முறை தொடர்பானதாக இருக்கும்.
அக்டோபர் 12 ம் தேதி நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தையின் போது ஆக்கப்பூர்வமான தீர்வு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பின்னும், பேச்சுவார்த்தைகள் "பயனுள்ளதாகவும் ஆக்கபூர்வமானதாகவும்" இருந்ததாக இரு தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.
ALSO READ | “தீமை அழிந்து நன்மை மலரட்டும்”... ஜோ பிடன், கமலா ஹாரிஸின் நவராத்திரி வாழ்த்து..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe