மும்பை: மகாராஷ்டிரா பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீலின் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை அதிகரித்துள்ளது. செவ்வாயன்று, சந்திரகாந்த் பாட்டீல் (Chandrakant Patil) கூறிய கருத்தை பார்த்தால், கூட்டணியிலிருந்து பிரிந்த சென்ற நட்பு கட்சியான சிவசேனாவிடம் மீண்டும் கை கோர்க்க உள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், முதலமைச்சர் பதவி குறித்த முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், எந்தவொரு பிராந்திய கட்சியுடனும் இந்த பதவியை பாஜக பகிர்ந்து கொள்ள மாட்டாது என்றும் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில், மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், இதுபோன்ற எந்தவொரு திட்டத்தையும் (இரண்டு கட்சி மீண்டும் இணைவது) குறித்தும் தனக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை அல்லது சிவசேனா (Shiv Sena) தரப்பில் இருந்தும் எதுவும் தகவல் இல்லை என்று கூறினார்.


மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தின் அரசியலில் மாற்றம் நிகழப்போகிறது என்பதை குறிக்கும் வகையில், பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா, திங்களன்று கட்சித் தொழிலாளர்கள் மாநாட்டில் மகாராஷ்டிராவில் சொந்தமாக ஒரு அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியை மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். 


ALSO READ | மகாராஷ்டிராவில் மக்கள் ஆணையை அவமதித்தது சிவசேனா, BJP அல்ல: ஷா!


இதன் பின்னர், செவ்வாயன்று, பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், "ஒரு தேசிய கட்சியாக இருப்பதால், பாஜக முதலமைச்சர் (Chief Minister) பதவியை எந்த பிராந்திய கட்சியுடனும் பகிர்ந்து கொள்ளாது, ஏனெனில் அவ்வாறு செய்தால், பீகார், ஹரியானா போன்ற மாநிலங்களிலும் இதே சூத்திரத்தை பின்பற்ற வேண்டும் என்றார். 


பாட்டீல் ஒரு மராத்தி செய்தி சேனலிடம், "மாநில நலனுக்காக சிவசேனாவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும், அதாவது இரு கட்சிகளும் (பாஜக மற்றும் சிவசேனா) ஒன்றாக ஆட்சி அமைத்தால், ஆனால் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன்,  "எதிர்காலத்தில் நாங்கள் ஒன்றாக தேர்தலில் போட்டியிட மாட்டோம்" என்றார்.


சிவசேனாவுடன் 5 ஆண்டு காலம் நட்பாக இருந்தோம்!
முதலமைச்சர் பதவியில் பாஜகவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பாட்டீல், “கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் சிவசேனாவுடன் மிகவும் தாராளமாக நடந்து கொண்டிருக்கிறோம். 2019 சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகும், நாங்கள் கட்சியுடன் அதிக மந்திரி பதவிகளைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருந்தோம், ஆனால் ஒரு தேசியக் கட்சியாக இருப்பதால், முதலமைச்சர் பதவியை எந்த பிராந்தியக் கட்சியுடனும் பாஜக பகிர்ந்து கொள்ள முடியாது. '' நாங்கள் இதைச் செய்தால், பீகார், ஹரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் இதைச் செய்ய வேண்டியிருக்கும். இந்த மாநிலங்களில், பிராந்திய கட்சிகளுடன் இணைந்து பாஜக (BJP) ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | BJP ஒரு 'உண்மையான நயவஞ்சகர்' என சிவசேனா கடுமையாக தாக்கு..!


முதல்வர் பதவி யாருக்கு? உடைந்த பாஜக-சிவசேனா கூட்டணி!
பாஜகவும் அதன் பழைய நட்பு கட்சியான சிவசேனாவும் 2019 சட்டமன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்டன. ஆனால் முதலமைச்சர் பதவியில் யார் அமர்வது என்பது குறித்து இரு கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் சிவசேனா பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. சிவசேனா பின்னர் என்.சி.பி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) கூட்டணி அமைத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராகா சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக்கொண்டார்.