இன்று கேரளா மாநில கண்ணூரில் நடைபெற்ற கட்சி அலுவலகத்தை திறப்பு விழா மற்றும் பாஜக பேரணியில் கலந்துக் கொண்ட அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா அவர்கள் சபரிமலை குறித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் மதநம்பிக்கைகளை காப்பற்ற மாபெரும் போராட்டம் நடைபெறு வருகிறது. இதனால் கேரளாவில் செயல்பட்டு வரும் இடதுசாரி அரசு, மத நம்பிக்கைகள் கொண்டர்வர்களையும், பி.ஜே.பி. மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் கைது செய்து வருகிறது. அவர்கள் மீது அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட சுமார் 2,800 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. சபரிமலை பக்கதர்களுக்கு பாஜக மலைபோல நின்று பாதுக்காக்கும். பாதுகாத்து வருகிறது. அதேபோல கேரளா மக்களுக்கும் துணை நிற்ப்போம்.


உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காரணம் காட்டி, பக்கதர்களுக்கு எதிராக கேரளா அரசு செயல்பட வேண்டாம். சபரிமலையில் உள்ள ஐயப்பன் சாமி ஒருபிரம்மச்சாரி ஆகும். அதனால் ஒரு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை. என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.