புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) ஆலையில் வியாழக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SII யின் மஞ்ச்ரி ஆலையின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு BCG தடுப்பூசி தொடர்பான பணிகள் நடந்துவந்தன.


கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படும் கிடங்கு இந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்று SII நிர்வாக இயக்குனர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்தார்.



புனேவின் (Pune) மேயர் முர்லிதர் மொஹோல், தனக்கு இந்த விபத்து குறித்து மதியம் சுமார் 2.50 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு கூடுதல் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன என்றும் குறினார்.


ALSO READ: தடுப்பூசிக்கு பிறகு ஏற்படும் சிறிய தொற்று ஒரு நல்ல அறிகுறி: AIIMS இயக்குநர்


"கட்டுமானத்தில் உள்ள பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2.30 மணியளவில் தீ பற்றிய தகவல் கிடைத்தது. இதுவரை, தீக்கான காரணமோ, சேத்தத்தின் அளவு பற்றியோ தெரியவில்லை. விரைவாக தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து உயிர் சேதங்கள் எதையும் தவிர்ப்பதில் தற்போது எங்கள் கவனம் உள்ளது” என்று  பி.எம்.சி தலைமை தீயணைப்பு அதிகாரி கூறினார்.


SII-யின் பல்வேறு ஆலைகளில் கொரோனா வைரசுக்கான கோவிஷீல்ட் உட்பட பல தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தீக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கட்டிடத்திற்குள் நான்கு பேர் இருந்தததாகவும், இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ இதுவரை மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களுக்கு பரவியுள்ளது.


இந்த விபத்து தொடர்பான மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


ALSO READ: உலகின் முதல் கொரோனா நோயாளியை மறைத்த சீனா; உலகம் பாதித்தது இவரால் தான்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR