Breaking: ஆந்திரா, சண்டிகரில் நுழைந்தது ஓமிக்ரான் தொற்று, அதிகரிக்கும் எண்ணிக்கை
இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12, 2021) கொரோனா தொற்றின் ஓமிக்ரான் மாறுபாட்டால் இருவர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
புது தில்லி: இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12, 2021) கொரோனா தொற்றின் ஓமிக்ரான் மாறுபாட்டால் இருவர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஓமிக்ரான் மாறுபாட்டல் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
சண்டிகரில், நவம்பர் 22 ஆம் தேதி இந்தியாவுக்கு வந்த இத்தாலியைச் சேர்ந்த 20 வயது நபருக்கு, டிசம்பர் 1 ஆம் தேதி கோவிட்-19 (COVID 19) நோய் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அவருக்கு ஓமிக்ரான் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த நபருக்கு ஃபைசர் தடுப்பூசியின் டோஸ்கள் முழுமையாக போடப்பட்டுள்ளதாக சண்டிகர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மறுபுறம், அயர்லாந்தைச் சேர்ந்த 34 வயது நபருக்கு விசாகப்பட்டினத்தில் ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
ALSO READ | Mask: இதுதான் உண்மையான கொரோனா மாஸ்க்! வைரஸ் வந்தால் ஒளிரும் முகக்கவசம்
முன்னதாக, மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) 7 பேருக்கு கொரோனா தொற்றின் ஒமிக்ரான் வகை மாறுபாடு இருப்பதாக கண்டறியப்பட்டது என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்தது.
நோயாளிகளில் மூன்று பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 4 பேர் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சியைச் சேர்ந்தவர்கள்.
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கோவிட்-19 இன் புதிய ஓமிக்ரான் மாறுபாட்டைப் பற்றி ஆராய்ந்து வரும் நிலையில், டெல்டா மற்றும் பீட்டா மாறுபாடுகளை விட புதிய மாறுபாடு அதிக அளவில் தொற்றை பரப்பக்கூடியதாக உள்ளது என ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் வியாழன் வெளியிட்ட ஆரம்ப கட்ட ஆய்வில், ஓமிக்ரான் மாறுபாடு (Omicron Variant), கொடிய டெல்டா போன்ற மற்ற வகைகளை விட மூன்று மடங்கு அதிகமாக மறு நோய்த்தொற்றுகளை (reinfections) ஏற்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | அதிகரிக்கும் ஒமிக்ரான் எண்ணிக்கை: மகாராஷ்டிராவில் 7 பேருக்கு தொற்று உறுதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR