இந்தியா-இங்கிலாந்து நட்புறவில் இது ஒரு அற்புதமான நேரம்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்
`அருமையான வரவேற்புக்கு நன்றி.. இந்தியா-இங்கிலாந்து நட்புறவில் இது அற்புதமான நேரம்” பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்
புது தில்லி: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22, 2022) புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றார். இங்கிலாந்து பிரதமருக்கு பிரதமர் நரேந்திர மோடி அங்கு சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகை வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், "அருமையான வரவேற்புக்கு நன்றி..." என்று கூறினார். குடியரசுத் தலைவர் மாளிகை வந்த இங்கிலாந்து பிரதமருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
"இந்தியா-இங்கிலாந்து நட்புறவில் இது அற்புதமான நேரம். ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான மிகவும் நல்ல தருணம் இது. இப்போது இருப்பது போல, இதற்கு முன் எப்போதும் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே உறவுகள் இவ்வளவு வலுவாகவும் சிறப்பாகவும் இருந்ததில்லை என நான் நினைக்கிறேன்." என்று ஜான்சன் தெரிவித்தார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பிற்பகலில் பிரிட்டன் பிரதமர் மற்றும் பிரதமர் மோடிக்கு இடையில் ஹைதராபாத் மாளிகையில் அரசு முறை பேச்சுவார்த்தை நடக்கும்.
மேலும் படிக்க | சபர்மதி ஆசிரமத்தில் நூல் நூற்ற பிரிட்டன் பிரதமர்
போரிஸ் ஜான்சன் பிரிட்டன் மற்றும் இந்தியாவின் மூலோபாய பாதுகாப்பு, இராஜ்ஜீய மற்றும் பொருளாதார கூட்டாண்மை குறித்து ஆழமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நெருக்கமான கூட்டாண்மையை மேம்படுத்துவதையும், இந்தோ-பசிபிக் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் இந்த பேச்சுவார்த்தை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
வியாழக்கிழமை இரவு போரிஸ் ஜான்சன் டெல்லி சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார். இங்கிலாந்து பிரதமர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடனும் பேச்சுவார்த்தை நடத்துவார்.
மேலும் படிக்க | 34 லட்சம் பயனாளிகளுக்கு 3628 கோடி ரூபாய் கடன் வழங்கிய பிரதமர் ஸ்வநிதி திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR