பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார்

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், இரண்டு நாள் அரசு முறை பயணமாக, இன்று ( 2022, ஏப்ரல் 21ம் தேதி) இந்தியா வந்தடைந்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 21, 2022, 09:54 AM IST
பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார் title=

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், இரண்டு நாள் அரசு முறை பயணமாக, இன்று ( 2022, ஏப்ரல் 21ம் தேதி) இந்தியா வந்தடைந்தார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வந்திறங்கிய அவரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

முதல் நாளில் காந்தி ஆசிரமம் சென்று பார்வையிடுதல், தொழில்ரீதியா உரவை மேம்படுத்த ஆலோசனை, பிரதமர் மோடியுடன் சந்திப்பு  உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். 

அதோடு அவரது பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம்  மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து முக்கியமாக ஆலோசனை செய்யப்படும் என எதிரபார்க்கப்படுகிறது. இந்தியா பிரிட்டன் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

இந்தியாவிற்கு வரும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுக்கு பல பில்லியன் பவுண்டுகள்  அதிகரிக்கக்கூடிய வகையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு ஈடாக இந்தியாவிற்கு கூடுதல் விசாக்களை வழங்க தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

"எங்கள் நாட்டிற்கு திறமையானவர்கள் வருவதற்கு நான் எப்போதும் ஆதரவாக இருக்கிறேன்," என்று செய்தியாளர்களிடம் கூறிய  ஜான்சன் "எங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு, மேலும் திரமையான ஆட்கள் தேவை என்னும் நிலையில் நாம் ஒரு முற்போக்கான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்" என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான வர்த்தகக் கொள்கையில் இருந்து விடுபட்டு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சுற்றிலும் வேகமாக வளரும் பொருளாதாரங்களை நோக்கிய கொள்கையை முன்னெடுத்து செல்வதற்காக, பிரிட்டன், பிரெக்சிட்டிற்கு பின் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை  ஏற்படுத்த உயர் முன்னுரிமை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உக்ரைன், ரஷ்ய போர் நடந்து வரும் நிலையில், அவரது இந்த சந்திப்பு உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், இரண்டு முறை இந்தியா வருவதற்காக திட்டமிட்டிருந்தார். குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினரக கலந்து கொள்ள இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News