ரூ.7 லட்சம் செலவழித்து நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய சகோதரர்கள் கைது!
கொரோனா விதிமுறைகளை மீறி வளர்ப்பு நாய்க்குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடி விருந்தளித்த சகோதரர்கள் மற்றும் அவர்களது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
குஜராத்தின் அகமதாபாத் நகரின் கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வீட்டில் சிராக் படேல் மற்றும் அவரது சகோதரர் உர்விஷ் படேல் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வீட்டில் இந்திய ஸ்பிட்ஸ் இனத்தை சேர்ந்த ஒரு நாய்க்குட்டியை செல்லமாக வளர்த்து வருகின்றனர். 'அபி' என்று அந்த நாய்க்குட்டிக்கு பெயர் வைத்து அதற்கு பிறந்தநாள் கொண்டாட சகோதரர்கள் இருவரும் திட்டமிட்டனர்.
ALSO READ | Waste Tyres: தேய்ந்து போன வாகன டயர்கள் தொடர்பான விதிகளில் மாற்றம்..!!
அதன்படி மனிதர்களுக்கு விழா கொண்டாடுவதை போல அந்த நாய்க்குட்டியின் பிறந்தநாள் விழாவுக்கென்று கிருஷ்ணா நகரில் பிரம்மாண்டமாக தோரணங்கள் கட்டி, பிரத்யேகமாக அச்சிடப்பட்ட அழைப்பிதழ்கள், விருந்துகள், இசை நிகழ்ச்சிகள் என அதிரடியான ஏற்பாடுகளை செய்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். இவர்களின் அழைப்பினை ஏற்று நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் நாய்க்குட்டியின் பிறந்தநாள் விழாவிற்கு வருகை புரிந்தனர், இதனால் அந்த இடமே விழாக்கோலம் பூண்டது. ஆனால் வந்தவர்கள் யாரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை.
பிறந்தநாள் விழாவின் நாயகனான 'அபி' என்கிற நாய்க்குட்டிக்கு பட்டு துணியாலான ஆடைகளை அணிவித்து, சிறப்பான முறையில் சிகை அலங்காரம் செய்து பிறந்தநாள் கேக் வெட்ட அழைத்து வந்தனர். அந்த நாய்க்குட்டியை தூக்கி தனது கையில் வைத்துக்கொண்டு சகோதரர்கள் இருவரும் இணைந்து கேக்கை வெட்டி , நாய்க்கு ஊட்டிவிட்டனர். இந்த பிறந்தநாள் விழாவிற்கு சகோதரர்கள் இருவரும் ரூ.7 லட்சம் செலவு செய்து இருக்கின்றனர். மேலும் இந்த விழா கிட்டத்தட்ட இரவு 11 மணி வரை சிறப்பாக நடந்தது.
இந்த செய்தி அப்பகுதிகளில் தீயாய் பரவிய நிலையில், கொரோனா விதிமுறைகளை மீறி அதிக மக்கள் கூட்டங்களை கூட்டி விழா கொண்டாடுவது போலீசுக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சகோதரர்களான சிராக் படேல், சகோதரர் உர்விஷ் படேல் மீதும் அவர்களது நண்பரான திவ்யேஷ் மெஹாரியா ஆகிய மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ALSO READ | Cheapest Flight Tickets: ₹ 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் விமான டிக்கெட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR