Waste Tyres: தேய்ந்து போன வாகன டயர்கள் தொடர்பான விதிகளில் மாற்றம்..!!

பழைய டயர்களை அப்புறப்படுத்தும் பொறுப்பு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 6, 2022, 05:46 PM IST
  • ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் கழிவு டயர்கள் மறுசுழற்சிக்காக வருகின்றன
  • நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 275,000 டயர்கள் வீணாகின்றன.
Waste Tyres: தேய்ந்து போன வாகன டயர்கள் தொடர்பான விதிகளில் மாற்றம்..!! title=

புதுடெல்லி: வாகனங்களில் உள்ள் அடயர்கள் சிறிது காலம் கழித்து பழுதடைந்து விடும். வாகனாம் எவ்வளவு தூரம் பயணித்துள்ளது, வாகனம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை பொறுத்து, அதன் பழுதடையும் காலம் மாறுபடலாம். பழுதடைந்த பின் அதை மாற்ற வேண்டும். ஆனால் பழைய டயர்கள் எவ்வாறு அப்புறப்படுத்தப்படுகின்றன என்பது குறித்து நீங்கள் எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா. பழைய டயர்களை அப்புறப்படுத்தும் பொறுப்பு தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையில் சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 2.75 லட்சம் டயர்கள் வீணாகின்றன

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) வழக்கிற்காக வழங்கப்பட்ட தரவுகளின்படி, இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,75,000 டயர்கள் பலனற்று போகின்றன அல்லது பழுதடைகின்றன, ஆனால் அவற்றை அகற்றுவதற்கான விரிவான திட்டம் எதுவும் இல்லை. கூடுதலாக, சுமார் 3 மில்லியன் கழிவு டயர்கள் மறுசுழற்சிக்காக வருகின்றன. NGT, செப்டம்பர் 19, 2019 அன்று, ஆயுள் முடிவடையும் டயர்கள்/கழிவு டயர்களின் (ELT) முறையான மேலாண்மை தொடர்பான விவகாரத்தில், விரிவான கழிவு மேலாண்மை மற்றும் கழிவு டயர்களுக்கான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (CPCB) உத்தரவிட்டது. மேலும், உபயோகமற்ற டயர்களை மறுசுழற்சி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

ALSO READ | மீண்டும் நிறுத்தப்படுகிறதா அகவிலைப்படி? அதிர்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்

மறுசுழற்சி செய்யப்படும் டயர்கள் 

கழிவு டயர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர், நொறுக்கு ரப்பர், நொறுக்கு ரப்பர் மாற்றியமைக்கப்பட்ட பிட்டுமின் (CRMB), மீட்கப்பட்ட கார்பன்  மற்றும் பைரோலிசிஸ் எண்ணெய்/கரி ஆகிய வடிவத்தில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. 

NGT வழக்கில் மனுதாரர், இந்தியாவில் பைரோலிசிஸ் எனப்படும் எரிப்பதன் மூலம்  மறுசுழற்சி செய்யப்படும் தொழில் குறைந்த தரமான பொருட்களை உற்பத்தி செய்வதாகவும், இது சுற்றுச்சூழலுக்கு பெரிதும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்கவும், இதனால் ஏற்படும் புற்றூ நோய்  மற்றும் சுவாசம் தொடர்பான நோய் அபாயத்தை தடுக்கவும், இதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரியது.

புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது

2022-23க்கான EPR, அதாவது extended producer responsibility விதிகளின் கீழ் 2020-21ல் தயாரிக்கப்பட்ட/இறக்குமதி செய்யப்பட்ட புதிய டயர்கள் உற்பத்தி அளவின் 35 சதவீதமாக உள்ள நிலையில், 2023-24க்கான EPR விதிகளின் படி, நாட்டில் உற்பத்தி செய்யப்படும்/இறக்குமதி செய்யப்படும் புதிய டயர்களின் அளவில் 70 சதவீதம் இருக்கும் என புதிய வழிகாட்டுதல் குறிப்பிடுகிறது. 2021-22 மற்றும் 2024-25க்கான EPR விதிகளின் படி, 2022-23 இல் தயாரிக்கப்பட்ட/இறக்குமதி செய்யப்பட்ட புதிய டயர்களின் அளவில் 100% ஆக இருக்கும்.

ALSO READ | திமுக ஆட்சியில் 'துப்பாக்கி' கலாச்சாரம் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய அதிமுக

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News