விமான நிறுவனங்கள் அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த சலுகை மூலம் பொது மக்கள் மலிவான விலையில் விமானத்தில் பறக்க வாய்ப்புக் கிடைக்கிறது. அத்தகைய சலுகையை விஸ்தாரா நிறுவனம் (Vistara Airline) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் தனது 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விமான பயணிகளுக்கு இந்த சிறப்பு சலுகை (Vistara 7th Anniversary Offer) அறிவித்துள்ளது. அதாவது ரூ.1000-க்கும் குறைவான விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது. இந்த சலுகை சர்வதேச விமானங்களுக்கும் பொருந்தும் என்பது சுவாரஸ்யமானது.
டிக்கெட் புக் செய்ய நிபந்தனைகள்
விஸ்தாரா நிறுவனத்தின் இந்த சிறப்புச் சலுகையில் (Vistara offers flight tickets) , எகானமி வகுப்பிற்கான ஒரு வழித்தடம் கட்டணம் ரூ. 977-ல் இருந்து தொடங்குகிறது. அதே சமயம் பிரீமியம் எகானமி வகுப்பின் தொடக்கக் கட்டணம் ரூ.2,677 ஆகும். அதேபோல வணிக வகுப்புக்கான கட்டணம் ரூ. 9,777-லிருந்து தொடங்குகிறது. இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. இதைப் பயன்படுத்திக் கொள்ள, இன்று அதாவது ஜனவரி 7, 2022 அன்று பிற்பகல் 23:59 மணிக்குள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். ஜனவரி 21, 2022 முதல் செப்டம்பர் 30, 2022 வரையிலான பயண டிக்கெட்டுகளுக்கு இந்தச் சலுகை (Flight Ticket Offer) செல்லுபடியாகும். சர்வதேச விமானங்களைப் பொறுத்தவரை, இந்தச் சலுகை என்பது, தற்போது முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ALSO READ | Asteroid: இன்னும் இரு வாரங்களில் பூமியை கடக்கும் பிரம்மாண்ட சிறுகோள்! எச்சரிக்கை!!
எப்படி விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்?
விஸ்தாராவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.airvistara.com க்கு செல்வதன் மூலம் டிக்கெட் விற்பனையின் கீழ் உங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இது தவிர, விமானத்தின் மொபைல் செயலி, விஸ்தாராவின் விமான நிலைய டிக்கெட் அலுவலகங்கள் (ஏடிஓக்கள்), விமானத்தின் அழைப்பு மையங்கள், ஆன்லைன் பயண முகவர்கள் மற்றும் பயண முகவர்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை:
இந்த சலுகை குறைந்த இருக்கைகளுக்கு மட்டுமே என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இதைப் பெறலாம். இந்த சலுகையின் கீழ், இருக்கைகள் புக் ஆன பிறகு, பயணிகள் (Domestic Travellers) வழக்கமான கட்டணத்தில் தான் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இந்த சலுகையுடன் வேறு எந்த வவுச்சரையும் சேர்க்க முடியாது என்று விமான நிறுவனம் தெளிவுப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR