Budget 2024: வருமான வரி அடுக்குகளில் மாற்றம் இல்லை, தற்போதைய அடுக்குகள் என்ன? விவரம் இதோ
Budget 2024: இது இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால், இன்று வரி முறைகள் மற்றும் வரம்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Budget 2024: பட்ஜெட் என்றாலே பலருக்கு பல ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். இதில் முக்கியமாக, சம்பளம் பெறும் வகுப்பினர் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் வருமான வரிச் சலுகைதான். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), சற்றுமுன் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் புதிய மற்றும் பழைய வருமான வரி முறைகளுக்கான வரி அடுக்குகளில் (Tax Slabs) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால், இன்று வரி முறைகள் மற்றும் வரம்புகளில் எந்த மாற்றமும் இருக்காது என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய மற்றும் பழைய வரி முறைகளின் வரி அடுக்குகள் என்ன என்பது பற்றி இங்கே காணலாம்
புதிய வரிமுறை அடுக்குகள் (New Tax Regime Slabs)
- 3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது
- 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும் (பிரிவு 87A-ன் கீழ் வரி தள்ளுபடி (Tax Rebate) கிடைக்கும்)
- 6 முதல் 9 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் (பிரிவு 87A இன் கீழ் ₹7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி தள்ளுபடி கிடைக்கும்)
- 9 முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
- 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
- 15 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேலான வருமானத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்
புதிய வரி முறையில் (New Tax Regime) உள்ள வரி விகிதங்கள் (Tax Rates) அனைத்து வகையினருக்கும், அதாவது தனிநபர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.
மேலும் படிக்க | Budget 2024: ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஜாக்பாட்
பழைய வரி முறை வரி அடுக்குகள் (Old Tax Regime Slabs)
- 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு பழைய வரி முறையின் கீழ் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- 2.5 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு பழைய வரி முறையின் கீழ் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
- தனிநபர் வருமானம் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருந்தால், அதற்கு பழைய வரி முறையில் 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
- பழைய வடி முறையின் கீழ், தனிநபர் வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
பழைய வரி விதிப்பில் (Old Tax Regime), 60 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 80 வயதுக்கு குறைவான மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) 3 லட்சம் ரூபாய் வரையிலும், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு (Super Senior Citizens) 5 லட்சம் ரூபாய் வரையிலும் வருமான வரி விலக்கு (Tax Exemption) வரம்பு உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பு: ஜூலை வரை காத்திருக்க வேண்டுமா?
இந்த பட்ஜெட்டில் வருமான வரிச் சீர்திருத்தங்கள் குறித்த அறிவிப்பு வரும் என நடுத்தர வர்க்கத்தினர் (Middle Class) ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் இன்று இது சம்பந்தமான எந்த அறிவிப்பும் வரவில்லை. எனினும், மக்களவை தேர்தல் (Lok Sabha Election) முடிவுகள் வந்தவுடன் அமையும் புதிய அரசாங்கம், ஜூலை மாதம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் பற்றிய அறிவிப்பு கண்டிப்பாக இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | Budget 2024: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்கள் நோக்கம்- நிதி அமைச்சர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ