பெங்களூரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகா தலைநகர் காசுவஹஹல்லி பகுதியில் உள்ள சர்ஜப்பூர் சாலையில் ஏற்பட்டது.



தி நியூஸ் மினிட் தகவலின் படி, குறைந்த பட்சம் 15 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும், இதுவரை எட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. 


சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.



கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த கட்டுமானப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.