அடுத்த பிரதமர் யார் என்பதை கணிக்க முடியாது; பயங்கர அரசியல் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில், இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் இருப்பார்கள் என்று கணிப்பது கடினம் என்று யோகா குரு ராம்தேவ் கூறினார். மேலும், மோடி பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பாஜக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.


லோக்சபா தேர்தல் குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், நாட்டில் தற்போது அரசியல் சூழ்நிலை மிகவும் சிக்கலாக உள்ளது. 2019 லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என நம்மால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் யுத்தம் கடுமையாக இருக்கும் என்பது உறுதி. வரும் லோக்சபா தேர்தலில் நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ போவதில்லை.


தற்போது நான் அரசியலில் கவனம் செலுத்தவில்லை. அரசியல் அல்லது மதம் சார்ந்த திட்டம் ஏதும் இல்லை. நாட்டையும் உலகையும் ஆன்மிகம் சார்ந்ததாக மாற்றவே விரும்புகிறேன். யோகா மற்றும் வேத பயிற்சிகள் மூலம் யெ்வீகம், வளம், ஆன்மிக இந்தியாவை உருவாக்குவதையே விரும்புகிறேன் என்றார். 


கடந்த லோக்சபா தேர்தலின் போது ராம்தேவ், பா.ஜ.,விற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். இதுன் காரணமாகவே அவர் அரியானா மாநில தூதராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அரசு சார்பில் கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டதுடன், சுழல் விளக்கு பொறுத்தப்பட்ட கார் பாதுகாப்பு காவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.