Couple Viral Video: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளம் பெண் ஒருவர் ஓடும் பைக்கில் பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்துக்கொண்டு பைக் ஓட்டும் தனது காதலனை கட்டிப்பிடித்து செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து இந்த விவகாரம் விசாகப்பட்டினம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த இளம் பெண்ணின் பெயர் கே ஷைலஜா (19) மற்றும் அவரின் காதலன் பெயர் அஜய்குமார் (22) என அடையாளம் காணப்படுள்ளனர். இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வீடியோ விசாகப்பட்டினத்தின் எஃகு ஆலை சாலையில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவை அந்த சாலை வழியாக காரில் சென்ற நபர் ஒருவர் மொபைலில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து இந்த வீடியோ வைரலானது.


இந்த இருவர் மீதும் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மோட்டார் வாகன சட்டம் 336, 279, 132 மற்றும் 129 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களது பெற்றோரும் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். 



போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடைபிடிப்பது மிகவும் அவசியம் என மாநகர காவல் ஆணையர் சி.எச்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து விதிகளை மீறுவோரின் வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.


மேலும் வைரல் செய்திகள் படிக்க...


மேடையிலேயே இப்படி ஆனா எப்படி? புதுமண ஜோடியின் வைரல் வீடியோ


நடுரோட்டில் இப்படியா ஆடுறது? ஆண்டிகளின் அக்கப்போர்: வீடியோ வைரல்


’லிப் கிஸ் ஒன்னு போதாது நாலஞ்சு வேணும்’ அடம்பிடிக்கும் கருப்பு பூனையின் சேட்டை; வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ