மேடையிலேயே இப்படி ஆனா எப்படி? புதுமண ஜோடியின் வைரல் வீடியோ

Funny Marriage Video: ஆசையாய் நடனமாட மேடைக்கு சென்ற திருமண ஜோடி, திடீரென மேடையில் விழுந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 29, 2022, 04:18 PM IST
  • மணமகள் மற்றும் மணமகன் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
  • திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேடையிலேயே இப்படி ஆனா எப்படி? புதுமண ஜோடியின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மணமகள் மற்றும் மணமகன் தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. இவற்றில் சில சமயம் மணமக்களின் காதலும், சில நேரங்களில் இவர்களின் வேடிக்கையான நடவடிக்கைகளும், அழகான நடன அசைவுகளும் காணப்படுகின்றன. மணமக்களின் நண்பர்கள் செய்யும் கிண்டல் கேலிகளின் வீடியோக்களும் மிகவும் வைரலாகின்றன. 

தற்போதும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருமணம் முடிந்ததும் மணமக்கள் மேடைக்கு வந்து காதலுடன் நடனம் ஆடத் தொடங்குவதைக் காண முடிகின்றது. ஆனால் அப்போது நடக்கும் ஒரு விஷயத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போது அவர்களின் பேலன்ஸ் கெட்டுப்போய் இருவரும் தடுமாறுகிறார்கள். அதற்கு பிறகு நடக்கும் விஷயத்தை பார்த்தால் நாம் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. இதை பார்த்தால் நமக்கு சிரிப்பும் வரும், பாவமாகவும் இருக்கும். 

மேலும் படிக்க | நாயிடம் கேவலமாக பல்பு வாங்கிய பெரிய சைஸ் முதலை: வீடியோ வைரல் 

மணமகளை விழ வைத்த மணமகன்

வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமக்கள் நடனம் ஆட மிகுந்த ஆசையுடன் மேடைக்கு வருவதைக் காண முடிகின்றது. மணமகன் தனது மணப்பெண்ணின் கையைப் பிடித்து காதல் போஸ் கொடுக்க விரும்புகிறார். ஆனால் இதற்கிடையில் அவரது சமநிலை குலைந்து அவர் தடுமாறி மணமகளுடன் தரையில் விழுகிறார். இதைப் பார்த்த விருந்தினர்களால் சிரிக்காமலும் இருக்க முடியவில்லை. அதேசமயம், ஆசையாக நடனமாச வந்தவர்கள் விழுந்ததை பார்த்து பரிதாபப்படாமலும் இருக்க முடியவில்லை. 

மேடையில் விழுந்த ஜோடியின் வீடியோவை இங்கே காணலாம்:

மணமக்கள் பற்றிய லட்சக்கணக்கான வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், இப்படி ஒரு வீடியோவை யாரும் பார்த்திருக்க முடியாது. மணமக்களின் இந்த வீடியோ jaipur_preweddings என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | ‘ஆள விடுடா சாமி’: விட்டால் போதும் என ஓடியே போன பாம்பு, வியக்க வைக்கும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News